மலாலாவை கொல்ல மீண்டும் முயற்சிப்போம்: பாகிஸ்தான் தாலிபான்கள் மிரட்டல்
இஸ்லாமாபாத்: மலாலா யூசுப்சாயை மறுபடியும் பார்த்தால் அவரை நிச்சயம் கொல்ல முயற்சி செய்வோம் என்று தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கைச் சேர்ந்த மலாலா யூசுப்சாய்(16) கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9ம் தேதி தாலிபான்களால் சுடப்பட்டார். தலையில் குண்டடிபட்ட மலாலா இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். தற்போது இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்ஹாமில் செட்டிலாகி அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு தாலிபான்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

கல்விக்காக அல்ல
மலாலா பாகிஸ்தானில் உள்ள அவரது பகுதியில் சிறுமிகள் மத்தியில் கல்வியை பரப்பியதற்காக ஒன்றும் அவரை தாக்கவில்லை. மாறாக இஸ்லாத்தை தாக்கி பேசியதற்காகத் தான் அவரை தாக்கினோம் என்று பாகிஸ்தான் தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஷஹிதுல்லா ஷாஹித் தெரிவித்துள்ளார்.

மீண்டும் தாக்குவோம்
மலாலாவை மறுபடியும் பார்த்தால் அவரை கொலை செய்ய நிச்சயம் முயற்சி செய்வோம். அவரைக் கொன்றுவிட்டு அதற்காக பெருமைப்படுவோம் என்றார் ஷாஹித்.

நோபல் பரிசு
அமைதிக்கான நோபல் பரிசுக்கு மலாலாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை பரிசு அறிவிக்கப்பட உள்ளது.

மலாலாவுக்காக பிரார்த்தனை
அமைதிக்கான நோபல் பரிசு மலாலாவுக்கு கிடைக்க வேண்டும் என்று பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் வசிக்கும் மலாலாவின் தோழி சபியா பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications