முதலாளித்துவ கொட்டத்தை அடக்க 'ஷட்டவுனை' கையில் எடுத்த ஒபாமா.. ஆனால் பலன் கிடைக்குமா?
வாஷிங்டன்: நம்ம ஊரில் அடிக்கடி பேசப்படும் ஒரு வார்த்தை முதலாளித்துவம். குறிப்பாக முதலாளித்துவ அமெரிக்கா என்று கம்யூனிஸ்ட் தோழர்கள் வர்ணிப்பார்கள். பலருக்கு அதென்ன அமெரிக்காவில் மட்டும்தான் முதலாளித்துவம் இருக்கிறதா என்று எரிச்சல் கூட வரலாம்.. ஆனால் உலகிலேயே மிகவும் அபாயகரமான முதலாளித்துவ மனப்பான்மை அமெரிக்காவில்தான்அதிகமாக உள்ளது.
அமெரிக்கர்களில் பெரும்பாலானவர்கள் முதலாளித்துவ மனப்பான்மை கொண்டவர்கள்தான். கோடீஸ்வரர்கள் அதிகம். சாதாரண மக்களுக்கான கவலை இல்லாத அமெரிக்கர்களே நிறையப் பேர் உள்ளனர்.
அரசு தரப்பிலிருந்து சாதாரன அமெரிக்கர்களுக்கு ஏதாவது நல்ல திட்டம் கொண்டு வந்தால் உடனே உள்ளே புகுந்து குழப்பி கெடுத்து விடுவார்கள். குறிப்பாக குடியரசுக் கட்சியினர் இந்த வேலையில் பயங்கர கில்லாடிகள்.

ஒபாமா கொண்டு வந்த சுகாதாரத் திட்டம்
அமெரிக்காவைப் பொறுத்தவரை அத்தனை மருத்துவ நவீன வசதிகளும் அங்கு கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் அதை சாதாரணர்கள் சாமானியமாக பயன்படுத்தி விட முடியாது. காரணம்... அந்த அளவுக்கு செலவுகளும் அதிகம்.

எல்லோருக்கும் தரமான மருத்துவம்.. குறைந்த விலையில்
இதுதான் ஒபாமாவின் சுகாதாரத் திட்டத்தின் சாராம்சம். அதாவது அனைத்து வகையான மருத்துவ வசதிகளும், அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அதுவும் குறைந்த செலவில். இதை உறுதிப்படுத்தத்தத்தான் அவர் சுகாதாரத் காப்பீட்டுத் திட்டத்தை கொண்டு வந்தார்.

கொந்தளித்துக் கிளம்பிய குடியரசுக் கட்சி
ஆனால் பணக்காரர்களுக்கு ஆதரவான கட்சி என்று வர்ணிக்கப்படும் குடியரசுக் கட்சிக்கு உடனே கோபம் வந்து விட்டது. சுகாதாரத் திட்டத்தை முடக்க ஆரம்பித்து விட்டனர்.

நம்ம ஊர் நாடாளுமன்றம் போல
அமெரிக்காவில் ஒபாமாவின் அரசும் கிட்டத்தட்ட நம்ம ஊர் மன்மோகன் சிங் அரசு போலத்தான். நாடாளுமன்றத்தில் அவரது கட்சிக்கு ஒரு அவையில் பெரும்பான்மை பலம் உள்ளது. இன்னொரு அவையில் குடியரசுக் கட்சியினர் ஜாஸ்தி.

முட்டுக்கட்டை..
இதனால் ஒபாமாவின் திட்டத்திற்கு குடியரசுக் கட்சியினர் முட்டுக்கட்டை போட்டு விட்டனர். பெரும் பெரும் பணக்காரர்கள் அனுபவிப்பதை சாமானியர்களும் அனுபவிப்பதா என்பதே அவர்களின் கோபமாக கருதப்படுகிறது. அதாவது அவர்கள் கட்டும் வரிப்பணத்திலிருந்து ஏழை, எளிய மக்களுக்கு - இந்த ஏழை எளியவர்களில் பெரும்பாலானவர்கள் கருப்பர் இனத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது - வசதிகள் போய்ச் சேருவதா என்பதே அவர்களின் பெரும் எரிச்சல்.

நீ ரைட்ல போனா.. நான் லெப்ட்ல போவேன்
குடியரசுக் கட்சியினரின் இந்த குறுக்குப் புத்தியை உணர்ந்த ஒபாமா அதிரடியாக அரசு இயந்திரத்தை மூடும் முடிவை எடுத்து அறிவித்து விட்டார். இப்போது கலங்கிப் போயுள்ளனர் குடியரசுக் கட்சியினர்.

கெட்ட பெயர் வரும்
ஒபாமாவின் நடவடிக்கையால் அமெரிக்காவில் அரசுத் துறைகள் முற்றிலும் மூடிக் கிடக்கின்றன. வேலைகள் ஸ்தம்பிக்க ஆரம்பித்துள்ளன. பொருளாதார நிலையும் மேலும் மோசமடையும் என்று தெரிகிறது. அத்தனை அமெரிக்கர்களும் இன்னும் சில நாட்களில் இந்த மூடல் நடவடிக்கையின் கடும் விளைவை சந்திக்கப் போகின்றனர். இந்த நிலைக்கு குடியரசுக் கட்சியினர்தான் காரணம் என்ற உணர்வு அமெரிக்கர்களிடையே அதிகரிக்கும் என்று தெரிகிறது.

கிளிண்டன் கையில் எடுத்த ஆயுதம்
கடைசியாக பில் கிளிண்டன்அதிபராக இருந்தபோது, இந்த ஷட் டவுன் ஆயுதத்தை 2 முறை கையில் எடுத்தார். அவரது ஆட்சிக்காலத்தில் குடியரசுக் கட்சியினரின் தலைவலி மிகப்பெரிதாக இருந்தது. அவர்களை ஒடுக்க ஷட் டவுனை அவர் பயன்படுத்தினார்.
இப்போது கிளிண்டன் வழியில் ஒபாமாவும் இந்த ஷட் டவுனை கையில் எடுத்துள்ளார். ஆனால் இது அவருக்குப் பலன் தருமா என்பதைப் போகப் போகத்தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications