முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் கடைசி மகள் மேரி சோமஸ் காலமானார்
லண்டன்: இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் 'சர்' வின்ஸ்டன் சர்ச்சிலின் மகளான லேடி மேரி சோமெஸ் நேற்று மரணம்டைந்தார்.அவருக்கு வயது 91.
விண்ஸ்டன் சர்ச்சில்- கிளெமெண்ட்டைன் சர்ச்சில் தம்பதியரின் 5வது மகளான லேடி மேரி சோமெஸ், 1939- 1941ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் செஞ்சிலுவை சங்கம், தன்னார்வ பெண்கள் சேவை நிறுவனம் ஆகியவற்றில் சேர்ந்து தொண்டாற்றினார்.

கடந்த 1947-ம் ஆண்டு பரோன் கிரிஸ்டோபர் சோமெஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட மேரி, 1979-ம் ஆண்டு தனது தாயார் கிளெமெண்ட்டைன் சர்ச்சிலின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதி பதிப்பித்தார்.
மேரி சோமெஸுக்கு மொத்தம் 5 குழந்தைகள். இவரது மகன்களில் ஒருவரான நிக்கோலஸ் சோமெஸ் தற்போது இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் பழமைவாத கட்சி எம்.பி.யாக பதவியாக உள்ளார்.
சமீபகாலமாக உடல் நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்த மேரி சோமெஸ், நேற்று மாலை உயிரிழந்தார். உறவினர்கள் சூழ்ந்திருக்க (உள்ளூர் நேரப்படி) ஞாயிற்றுக்கிழமை மாலை அவரது உயிர் அமைதியாக பிரிந்ததாக அவரது மகன் நிக்கோலஸ் சோமெஸ் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications