25 ஆண்டுகள் கழித்து மியான்மரில் ஜனநாயக முறைப்படியிலான முதல் தேர்தல்
யங்கூன்: 25 ஆண்டுகள் கழித்து மியான்மரில் ஜனநாயக முறைப்படி இன்று தேர்தல் நடந்து வருகிறது.
மியான்மரில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் அண்மை காலமாக விதிகள் தளர்த்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 25 ஆண்டுகள் கழித்து ஜனநாயக முறைப்படி இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
664 தொகுதிகளை கொண்ட மியான்மர் நாடாளுமன்ற தேர்தலில் ராணுவத்தின் ஆதரவு உள்ள ஆளும் யு.டி.எஸ்.பி. கட்சிக்கும், எதிர்க்கட்சி தலைவரான ஆங் சாங் சூ கியின் என்.எல்.டி. கட்சிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.

பொதுமக்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்.
தேர்தல் பற்றி வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த ஜோபாய் என்கிற முஸ்லீம் கூறுகையில்,
நாங்கள் மாற்றத்தை எதிர்பார்த்துள்ளோம். நான் 53 ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால் என் வாழ்க்கையில் நான் பார்த்து எல்லாம் ராணுவ அதிகாரத்தை தான் என்றார்.
முன்னதாக 1990ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆங் சாங் சூ கி வெற்றி பெற்றபோதிலும் அந்த முடிவை ஏற்க ராணுவம் மறுத்துவிட்டது. இதையடுத்து சூ கியை 20 ஆண்டு காலம் வீட்டு காவலில் வைத்தது ராணுவம். அவர் கடந்த 2010ம் ஆண்டு தான் விடுவிக்கப்பட்டார்.
இந்த தேர்தலில் சூ கியின் கட்சி வெற்று பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications