ரஷ்யாவில் குழந்தையின் தலையை துண்டாக வெட்டிய ஆயா: பதற வைக்கும் வீடியோ
மாஸ்கோ: ரஷ்யாவில் முஸ்லீம் பெண் ஒருவர் குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையை கையில் வைத்துக் கொண்டு மெட்ரோ ரயில் நிலையத்தில் நான் ஒரு தீவிரவாதி என்று கத்தியுள்ளார்.
உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்தவர் கியுல்செஹ்ரா போபோகுலோவா(39). அவர் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஒரு வீட்டில் குழந்தையை பார்த்துக் கொள்ளும் ஆயாவாக வேலை செய்து வந்தார். அவர் கடந்த 18 மாதங்களாக ஆயாவாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் அவர் தான் கவனித்து வந்த குழந்தையின் தலையை வெட்டி அதை எடுத்துக் கொண்டு மாஸ்கோவில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்றார். கருப்பு நிற புர்கா அணிந்திருந்த அவர் ஒரு கையில் குழந்தையின் தலையை வைத்துக் கொண்டு அல்லாஹு அக்பர் என்றும், நான் ஒரு தீவிரவாதி என்றும் சப்தமாக தெரிவித்தார்.
இதை அந்த வழியாக சென்ற ஒருவர் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் போபோகுலோவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்களை குழந்தைகளை கவனிக்கும் வேலைக்கு சேர்க்கும் முன்பு அவர்கள் பற்றி விசாரித்து சேர்க்குமாறு அதிகாரிகள் பெற்றோர்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications