அமெரிக்காவில் புயலின் போது பிறந்த குழந்தைக்கு ஹார்வே என பெயர் சூட்டிய தாய் #Harvey
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் புயலின் போது பிறந்த குழந்தைக்கு ஹார்வே என அதன் தாய் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் புயல் தாக்கியபோது பிறந்த குழந்தைக்கு அதன்ஹா தாய் ஹார்வே என பெயர் சூட்டியுள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மணிக்கு 215 கிலோமீட்டர் வேகத்தில் அதாவது சுமார் 130 மைல் வேகத்தில் ஹார்வே புயல் கரையை கடந்துள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவை தாக்கியுள்ள இந்தக் கடுமையான புயலால் வெள்ளிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது.

இதனால் ஆங்காங்கே வெள்ளக் காடாக காட்சியளித்தது. இந்நிலையில் டெக்சாஸை சேர்ந்த இர்மா ரோட்ரிகியூஸுக்கு புயலின் போது கார்பஸ் கிறிஸ்டி மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது.
குழந்தையை பெற்றுக் கொள்ள மகப்பேறு அறைக்கு செல்லும் போது கூட தனது குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்று யோசிக்கவில்லை. ஆனால் கடும் புயல் காற்றின்போது பிறந்ததால் மருத்துவமனை ஊழியர்கள் ஹார்வே என்ற பெயரையே வைக்க அறிவுறுத்தினர்.
அதன்படி குழந்தைக்கு ஹார்வே என்ற பெயர் சூட்டப்பட்டது. புயல் காற்றின் போது குழந்தை பிறந்தது மகிழ்ச்சியான தருணமாக உள்ளதாகவும், எனக்கு மருத்துவமனை அளித்த சிகிச்சைக்கு நன்றிக் கடன்பட்டுள்ளதாகவும் பிரசவித்த பெண் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications