ஈரான் எண்களுக்கு போன் பண்ணா.. பெண் குரலில் பேசும் ரோபோ! இஸ்ரேல் கைவரிசை?

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: சைபர் தாக்குதலுக்கு பெயர் பெற்ற நாடு இஸ்ரேல். தற்போது இது, ஈரானுடன் சண்டை செய்து வரும் நிலையில், ஈரான் மொபைல் எண்களுக்கு வரும் அழைப்புகளை ஹேக் செய்யப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

அதாவது, பிரிட்டனில் வசிக்கும் ஈரானை சேர்ந்த பெண் ஒருவர், தனது குடும்பத்திற்கு போன் செய்து, நலம் விசாரிக்க முயன்றிருக்கிறார். ஆனால், மறுமுனையில் அவரது உறவினர் குரலுக்கு பதில் ரோபோ குரல் ஒலித்திருக்கிறது.

Iran Netanyahu US Israel

"ஹலோ? ஹலோ?யார் கூப்பிட்டது? நீங்கள் பேசுவதை கேட்க முடியவில்லை. யாருடன் பேச வேண்டும்? நான் அலிசியா. என்னை ஞாபகம் இருக்கிறதா? நீங்கள் யார் என்று எனக்குத் தெரியவில்லை என்று நினைக்கிறேன்!" என ஆங்கிலத்தில் இந்த குரல் ஒலித்திருக்கிறது. இது குறித்து வெளிநாட்டில் வசிக்கும் ஈரானியர்கள் 9 பேர் தங்களிடம் விஷயத்தை பகிர்ந்துக்கொண்டதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி ஊடகம் தெரிவித்திருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து விளக்கிய நிபுணர்கள், சாட்பாட் அல்லது செயற்கை நுண்ணறிவு மூலம் ரோபோ குரல் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளனர். வெளிநாட்டு வாழ் ஈரானியர்கள் தொடர்ந்து இது தொடர்பாக புகார்களை எழுப்பியுள்ளனர். ஆனால் ஐ.நா-வுக்கான ஈரான் தூதரகம் இதுகுறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை.

மொபைல் மற்றும் லேண்ட்லைன் தொடர்புகள் ஈரான் தகவல் அமைச்சகத்தால் கண்காணிக்கப்படுகின்றன. சிலர் இதை ஹேக் செய்ய முயன்றிருக்கலாம். குறிப்பாக இஸ்ரேல் இதற்கு காரணமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த ரோபோ குரல்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருந்தாலும், சில நேரங்களில் ஃபார்சி மொழியிலும் பேசியிருக்கின்றன. எனவே, இஸ்ரேல் ஹேக் செய்திருக்க வாய்ப்பு இல்லை என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர். முழுமையான ஆய்வுக்கு பின்னரே இது யாருடைய கைவரிசை என்பது தெரிய வரும்.

இது குறித்து நியூயார்க்கில் வசிக்கும் 30 வயது ஈரானிய பெண் கூறுகையில், "குடும்ப உறுப்பினர்களின் உண்மையான குரலை கேட்க முடியாமல் செயற்கை நுண்ணறிவு குரலை கேட்க வேண்டிய நிலை, மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. என் தாயாருக்கு இன்சுலின் தேவைப்படுகிறது. ஆனால் அவருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை" என்று கூறியுள்ளார்.

இஸ்ரேல் சைபர் தாக்குதலில் பெயர் பெற்றது என்பதால், இந்த தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள ஈரான் முழுவதும் இணைய சேவை பரவலாக துண்டிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், சிலர் ஸ்பெஷல் டிவைஸ்களை பயன்படுத்தி ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் இணைய சேவையை பெறுகின்றனர். இது சட்டவிரோதம் என்றாலும் சில இடங்களில் இப்படி நடப்பது சாதாரணமாகியுள்ளது. இது கூட ரோபோ குரலுக்கு காரணமாக இருக்கலாமோ? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

வழக்கமாக சைபர் தாக்குதல்கள், ஒரு நாட்டின் ராணுவத்தை குறி வைத்து நடத்தப்படும். ஆனால், கடந்த காலங்களில் நடந்த பல சைபர் தாக்குதல்கள், வெறுமனே ராணுவ அமைப்பை தாண்டி, பொதுமக்கள் தளத்தையும் பாதித்திருக்கிறது. தற்போது கேட்கும் ரோபோ குரலும் கூட, இப்படி திசை மாறிய சைபர் தாக்குதல்களாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+