9 வயதில் இருந்து பலாத்காரம்... இமெயில் மூலம் மாமாவை ஜெயிலுக்கு அனுப்பிய பெண் டாக்டர்
லண்டன்: பஞ்சாபை சேர்ந்த பெண் டாக்டர் இங்கிலாந்தில் இருந்து போலீசாருக்கு இமெயில் அனுப்பியதை அடுத்து அவரது மாமாவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ராணி பாக் பகுதியை சேர்ந்தவர் சுக்வந்த் சிங் சித்து(60). 1980ம் ஆண்டு பிறந்த சித்துவின் சகோதரியின் மகள் படிப்புக்காக அவரது வீட்டில் தங்கியிருந்தார். சித்துவோ சகோதரியின் மகளை பல ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

9 வயது சிறுமியாக இருக்கையில் இருந்து அவரை சித்து பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சித்துவின் சகோதரியின் மகள் எம்.பி.பி.எஸ். படித்து தற்போது இங்கிலாந்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
மாமா சித்து மீதான பயத்தால் இத்தனை ஆண்டுகளாக அவர் செய்த கொடுமைகள் பற்றி வாய் திறக்காத அவர் தற்போது இங்கிலாந்தில் இருந்து பஞ்சாப் மாநில ஐஜிக்கு இமெயில் மூலம் நடந்தது அனைத்தையும் தெரிவித்தார்.
அவரது இமெயிலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சித்துவை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சித்துவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. வழக்கு விசாரணையின்போது அந்த பெண் இங்கிலாந்தில் இருந்து வந்து நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications