காலில் விழுந்தும்.. 'ரெமிடிசிவிர்' கிடைக்கல.. உயிரை விட்ட மகன் - உடைந்து போன தாய்
நொய்டா: ரெமிடிசிவிர் மருந்துக்காக மருத்துவர் காலில் விழுந்த தாயின் மகன் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்திருக்கிறார்.
கடந்த வருடம் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நேரத்தில், உலக நாடுகளுக்கு மருந்துகளை அனுப்பி, சாவகாசமாக உதவிய நிலையில் இருந்த இந்தியா, தற்போது வீசி வரும் கொரோனா 2வது அலையில் சிக்கி சின்னாபின்னமாகிவிட்டது.
15க்கும் மேற்பட்ட உலக நாடுகள், இந்தியாவுக்கு உதவி புரிய விருப்பம் தெரிவித்திருக்கும் நிலையில், போதுமான ஆக்சிஜன் இல்லாமல், ரெமிடெசிவிர் மருந்துகள் இல்லாமல் திணறுகிறது இந்தியா.

ரெமிடிசிவிர் தேவை
இந்த நிலையில், நொய்டாவில் வசித்து வரும் ரிங்கி தேவி என்பவரது 24 வயது மகன் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாக, மருத்துவமனை நிர்வாகம் ரிங்கி தேவியை 'ரெமிடிசிவிர்' மருந்தை ஏற்பாடு செய்யுமாறு கூறிவிட்டது.

நீண்ட நேரம் காத்திருப்பு
இதையடுத்து, அங்கும் இங்கும் அலைந்த ரிங்கி தேவிக்கு, தலைமை மருத்துவ அதிகாரியின் அலுவலகத்தில் 'ரெமிசிடிவிர்' மருந்து கிடைப்பதாக தகவல் தெரிவிக்கப்பட, உடனே அங்கு விரைந்தார். அங்கு நீண்ட நேரம் காத்திருந்தும் அவருக்கு ரெமிடிசிவிர் மருந்து கிடைக்கவில்லை. அப்போது, தலைமை மருத்துவ அதிகாரி தீபக் ஓஹ்ரி அங்கு வர, யாரும் எதிர்பார்க்காத வகையில், அவருடைய காலில் விழுந்து தனது மகனுக்கு 'ரெமிடிசிவிர்' மருந்து கிடைக்க வேண்டினார்.

கை விரித்த அதிகாரிகள்
ரிங்கியிடம் இருந்து மருந்து சீட்டை எல்லாம் வாங்கிக் கொண்ட தலைமை மருத்துவ அதிகாரி, பிறகு ரெமிடிசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு இருப்பதாக கூறி, அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டார். இருப்பினும், விடாமல் மன்றாடிய தாய் ரிங்கி உட்பட வேறு சிலரும் தொடர்ந்து அவரிடம் மருந்துக்காக கெஞ்சியபடி இருந்தனர். ஆனால், யாருக்கும் மருந்து கிடைக்கவில்லை என்பதே நிதர்சனம்.

கொரோனா கோரம்
மாலை 4 மணி வரை ஏதாவது நல்ல பதில் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு ரிங்கி காத்திருந்தார். ஆனால், ஏமாற்றமே மிஞ்ச, அவர் மீண்டும் மருத்துவமனைக்கு செல்ல, மாலை 4:30 மணிக்கு ரிங்கியின் 24 வயது மகன், ரெமிசிடிவிர் மருந்து கிடைக்காத காரணத்தால் பரிதாபமாக உயிரிழந்தார். கொரோனாவின் கோர முகத்தை, நிதர்சனத்தை நீங்கள் தெரிந்து கொள்ள இந்த செய்தியைவிட ஒரு செய்தி ஒரு கிடைத்துவிடாது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications