மோடி பாகிஸ்தான் வந்தால் எதிர்க்க மாட்டோம்.. வைதிக்கிடம் உறுதியளித் ஹபீஸ் சயீத்
லாகூர்: பத்திரிக்கையாளரும், ராம்தேவின் நண்பருமான வேத் பிரகாஷ் வைதிக், தன்னை வந்து சந்தித்தபோது, பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானுக்கு வந்தால் அதை தனத அமைப்பு எதிர்க்காது என்று உறுதியளித்தாராம் ஜமாத் உத் தாவா அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீத்.
லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை நிறுவியர்தான் இந்த சயீத். இந்த அமைப்புதான் தற்போது ஜமாத் உத் தாவா என்ற பெயரில் பாகிஸ்தானில் இயங்கி வருகிறது. 2008ல் மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பத்து பேரை அனுப்பி கொலை வெறியாட்டம் போட்டதன் பின்னணியில் சயீத் இருக்கிறார்.
இந்த நிலையில், சயீத்தை பாகிஸ்தானுக்குப் போய் சந்தித்துப் பேசியுள்ளார் வைதிக். இதை நியாயம் கற்பித்துள்ளார் ராம்தேவும். இதற்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று மத்திய அரசு கூறுகிறது.
இந்த நிலையில் மோடி பாகிஸ்தான் வந்தால் அதை தனது அமைப்பு எதிர்க்காது என்று சயீத் வைதிக்கிடம் தெரிவித்தாராம்.

இதயப்பூர்வமாக சந்திக்கிறேன்
இதுகுறித்து சயீத் தனது டிவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார். அதில் அவர் கூறுகையில், நான் யாரையுமே இதயப்பூர்வமாகவே சந்திக்கிறேன். யார் வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம். எந்த நாட்டவராக இருந்தாலும், எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் என்னை சந்திக்கலாம்.

இந்தியாவின் குறுகிய மனப்பான்மை
இந்திய நாடாளுமன்றத்தில், என்னை ஒரு பத்திரிகையாளர் வந்து சந்தித்த விவகாரம் பரபரப்பான பிரச்சினையாக்கப்பட்டிருப்பது இந்திய அரசியல்வாதிகளின் குறுகிய மனப்பான்மையைத்தான் காட்டுகிறது. இது அவமானகரமானது. இதுதான் உண்மையான தீவிரவாதம்.

மோடி வருகையை எதிர்க்க மாட்டேன்
இந்தியப் பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு வந்தால் நீங்கள் எதிர்ப்பீர்களா என்று வைதிக் என்னிடம் கேட்டபோது, அதுபோன்ற அரசியல் மற்றும் போராட்டங்களில் எனது அமைப்பு பங்கேற்காது என்று அவரிடம் தெரிவித்தேன்.

மும்பை தாக்குதல்
மும்பையில் நடந்த தாக்குதல் தொடர்பாக இந்தியா அளித்த ஆதாரங்களை எனது அமைப்பு நிராகரித்தது குறித்து வைதிக் என்னிடம் விவாதித்தார். அப்போது நான் ஏன் இந்தியா, பாகிஸ்தான் நீதிமன்றங்களை மதி்ப்பதில்லை என்று நான் அவரிடம் கேட்டேன் என்று சயீத் கூறியுள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications