என்னமோ சரியில்லை.. துருக்கியை அடுத்து.. பல்வேறு நாடுகளில் "சீரியல்" நிலநடுக்கம்.. பெரும் குழப்பம்
ஆப்கானிஸ்தானில் மீண்டும் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அன்காரா: துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட தொடங்கி உள்ளன. உலகம் முழுக்க அடுத்தடுத்து விடாமல் நிலநடுக்கம் ஏற்படுவது மக்கள் இடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இன்று அதிகாலை 2.14 மணிக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பைசாபாத் நகரில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. கடந்த வியாழக்கிழமைதான் அங்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் சுவடுகள் காயும் முன் அங்கே மீண்டும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. நேற்று முதல்நாள் அதிகாலை இந்தோனேசியாவில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 97 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் இந்தோனேசியாவின் டோபெலோவிற்கு வடக்கு பகுதியில் 177 கிமீ தொலைவில் ஏற்பட்டு இருக்கிறது.

முந்தைய நிலநடுக்கம்
இரண்டு நாட்களுக்கு முன் தஜிகிஸ்தானில் முர்கோப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.ன் தஜிகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் உஸ்பெகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தானில் உணரப்பட்டது தஜிகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் 6.8 என்ற ரிக்டர் அளவுகோலில் பதிவு ஆனது. தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டு 20 நிமிடங்கள் கழித்து ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்தில் 5.0 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவு ஆனது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் நியூசிலாந்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. நியூசிலாந்து வெலிங்டன் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் 6.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் பல்வேறு கட்டிடங்கள், வீடுகள் இடிந்தன. ஆனால் இதனால் பெரிய உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

உயிரிழப்பு
அதேபோல் இன்று பிலிப்பைன்சில் அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவான நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. ஆனால் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நேற்று முதல்நாள் ரோமானியாவில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று கொலம்பியாவில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல் அமெரிக்காவின் ஓசன் வியூ பகுதியில் நேற்று 4.8 அளவில் இன்னொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. டாங்கோவில் நேற்று 5.3 ரிக்டர் அளவில் கூடுதலாக ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இருந்தியா, இலங்கையிலும் சிறிய அளவிலான நிலநடுக்கம் இரண்டு நாட்களுக்கு முன் உணரப்பட்டது. இதெல்லாம் கடந்த 10 நாட்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள்.

10 நாட்கள்
துருக்கி நிலநடுக்கத்தை தொடர்ந்து இப்படி அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட தொடங்கி உள்ளன. துருக்கி நிலநடுக்கம் இந்த வருடத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பேரழிவாக பார்க்கப்படுகிறது. துருக்கி அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதி ஆகும். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியில் இன்னும் மீட்பு பணிகள் முடியவில்லை. அங்கே தொடர்ந்து மக்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலநடுக்கம் எதிர்பார்த்ததை விட மிக மோசமான பேரழிவாக பார்க்கப்படுகிறது. கடந்த 50 வருடங்களில் துருக்கி சந்தித்த மிக மோசமான நிலநடுக்கமாக, பேரழிவாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.

பேரழிவு
துருக்கியின் காஜியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், ஒஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர் மற்றும் கிலிஸ் ஆகிய துருக்கி நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த 10 நகரங்கள் மிக மோசமான பாதிப்பை அடைந்து உள்ளன. துருக்கி பொதுவாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் ஆக்டிவ் நிலநடுக்க பகுதியாகும். துருக்கியில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நிலநடுக்கம் காரணமாக படுகாயம் அடைந்துள்ளனர். சிரியாவில் நிலநடுக்கம் காரணமாக 16 ஆயிரம் பேர் வரை படுகாயம் அடைந்து உள்ளனர். துருக்கியில் நிலநடுக்கம் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 42 ஆயிரமாக அதிகரித்து உள்ளது. சிரியாவில் இதுவரை 8 ஆயிரம் பேர் நிலநடுக்கம் காரணமாக பலியாகி உள்ளனர். துருக்கி நிலநடுக்கம் காரணமாக கிட்டத்தட்ட 100 கிமீ தூரத்திற்கு பால்ட் லைன் பாதிப்பு இதனால் ஏற்பட்டு உள்ளது. அதாவது 100 கிமீ தூரத்திற்கு தரையில் அடுக்குகள் இரண்டாக பிளந்து நகர்ந்து உள்ளன.

நிலநடுக்கம்
100 கிமீ தூரத்திற்கு நில அடுக்குகள் பிரிந்து பிளவுபட்டு இருக்கிறது. அந்த அளவிற்கு மோசமான நிலநடுக்கம் அங்கே ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கத்தோடு இல்லாமல் அடுத்தடுத்து உலக அளவில் பல நாடுகளில் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இப்போது சர்வதேச அளவில் அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கங்களுக்கு சர்வதேச வல்லுநர்கள் எந்த விதமான விளக்கமும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிரியா - துருக்கி நிலநடுக்கத்திற்கு பின் வரிசையாக அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு நாடுகளில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பூமியின் அடுக்குகள் ஒன்றாக இல்லாமல் திடீரென நகர்ந்து செல்வதுதான் நிலநடுக்கம். பூமி அடுக்குகளின் திடீர் நகர்தல்தான் நிலநடுக்கத்தை ஏற்படுத்தும். இந்த துருக்கி நிலநடுக்கத்தில் அரேபியன் பிளேட் அன்டோலியன் பிளேட் மீது நகர்ந்து உள்ளது. அடுத்தடுத்து மூன்று முறை இங்கே நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அதோடு ஒரு முறை பிளேட் நகர்ந்தால் அதற்கு மேலே இருக்கும் பிளேட்களும் நகரும் சூழ்நிலை ஏற்படும். இது கிட்டத்தட்ட சங்கிலி விளைவு போல சில நொடிகள் ஏற்படும். இதன்பின் இந்த நிலநடுக்கம் முடிந்தும் சிறிய அளவிலான நகர்வுகள் இருக்கும். இதை ஆப்டர் எபக்ட் என்றும் கூறுவார்கள்.துருக்கி நிலநடுக்கத்தில் இப்படித்தான் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலநடுக்கம் காரணமாக தற்போது உலக அளவிலும் பல்வேறு நில அடுக்குகள் நகர்கின்றதோ என்ற கேள்விகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications