சீனாவில் மலை உச்சியில் கண்ணாடி பாலம்: பார்த்தாலே கிறுகிறுக்குதே!
பெய்ஜிங்: சீனாவில் உள்ள சாங்கிங்கில் இருக்கும் மலை உச்சியில் குதிரையின் கால்குளம்பு வடிவில் கண்ணாடியிலான பாலம் கட்டப்பட்டுள்ளது.
சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ளது சாங்கிங் நகர். அந்த நகரில் இருக்கும் மலை உச்சியில் யுவான்த்வான் என்ற பெயரில் குதிரையின் கால்குளம்பு வடிவில் கண்ணாடி பாலம் கட்டப்பட்டு வந்தது.
அந்த பாலம் கட்டும் பணி முடிந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.

கண்ணாடி பாலம்
மலை உச்சியின் முனையில் உள்ள கால்குளம்பு போன்ற பாலத்தின் தரை பகுதி கண்ணாடியால் ஆனது. பாலத்தில் நின்று கீழே பார்த்தாலும் சரி, கண்ணாடி வழியாக பார்த்தாலும் சரி பிரமித்து விடுவீர்கள். 2 ஆயிரத்து 350 அடி உயரத்தில் இருக்கும் அந்த பாலத்தில் நடப்பது காற்றில் நடப்பது போன்ற அனுபவத்தை தரும் என்று கூறப்படுகிறது.

திறப்பு விழா
பாலத்தின் திறப்பு விழாவை பிரமாண்டமாக நடத்தினார்கள். திறப்பு விழா அன்று சீன மாடல் அழகிகளின் அழகிய அணிவகுப்பு நடத்தப்பட்டது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. யுவான்த்வான் பாலம் தான் மலை உச்சியில் மீது உள்ள கண்ணாடி நடைபாதைகளில் மிகவும் நீளமானது ஆகும்.

கட்டணம்
அந்த பாலத்தில் ஒரே நேரத்தில் 200 பேர் வரை செல்லலாம். 30 நிமிடங்கள் அந்த பாலத்தில் நடக்க ரூ.600 கட்டணமாக செலுத்த வேண்டும். மக்கள் அங்கிருந்து இயற்கை அழகை பார்த்து ரசிக்க ஏதுவாக ஒரு நேரத்தில் 30 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

நிலநடுக்கம்
குன்றின் உச்சியில் அதுவும் ஓரத்தில் உள்ள பாலம் என்று அஞ்ச வேண்டாம். ரிக்டர் அளவுகோலில் 8 அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சூறாவளியையும் தாங்கும் வகையில் பாலம் கட்டப்பட்டுள்ளது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications