உலகிலேயே ‘டெரர் செல்ஃபி’ இது தானாம்... பார்க்கும் போதே கண்ணைக் கட்டுதே!
ஹாங்காங்: மிக உயர்ந்த கட்டிடத்தின் உச்சியில் நின்றபடி எடுக்கப்பட்ட செல்ஃபி ஒன்று, உலகிலேயே டெரர் செல்ஃபி என்ற பாராட்டுகளுடன் யூடியூபில் ஹிட்டடித்துள்ளது.
தங்களைத் தாங்களே செல்போன் கேமராவில் போட்டோ எடுத்துக் கொள்வது ‘செல்ஃபி' என அழைக்கப் படுகிறது. தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் இத்தகைய செல்ஃபிக்களை பதிவேற்றம் செய்வதை பலரும் விரும்புகின்றனர்.
நெல்சன் மண்டேலாவின் இறுதிச் சடங்கின் போது அமெரிக்க அதிபர் ஒபாமா எடுத்துக் கொண்ட செல்ஃபி பெரும் பரபரப்பைக் கிளப்பியது. சமீபத்தில் செல்ஃபி எடுக்க முற்பட்ட போது போலீஸ்காரர் ஒருவர் தனது மனைவியுடன் சேர்ந்து உயிரிழந்த சம்பவம் கூட நடந்துள்ளது.
இந்நிலையில் செல்ஃபியிலும் ஏதாவது வித்தியாசமாக செய்ய நினைத்த சீன இளைஞர்கள், டெரர் செல்ஃபி ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்....

டெரர் செல்ஃபி...
ஹாங்காங்கின் வானளாவிய கட்டிடத்தின் உச்சியில் அமர்ந்தபடி 3 பேர் தோன்றுகிறார்களே, இதுதான் அந்த உலகின் 'டெரர் செல்ஃபி'.

அந்த தைரியசாலிகள்...
உலகமே வியக்கும் அளவில் செல்ஃபி எடுக்க முடிவு செய்த இந்த 3 பேரின் பெயர் முறையே லாவ், ஆண்ட்ரூ சூ மற்றும் ஏ.எஸ். ஆகும்.

1,135 அடிக் கட்டிடம்...
இவர்கள் தங்களது செல்ஃபிக்காகத் தேர்ந்தெடுத்த இடம் ஹாங்காங்கின் 5-வது மிக உயர்ந்த கட்டிடமான 'தி சென்டர் ஸ்கை ஸ்கராப்பர்'. இந்த கட்டிடத்தின் உயரம் 1,135 அடி ஆகும்.

இதெல்லாம் சாதாரணமப்பா...
ஏறி நின்று கீழே எட்டிப் பார்த்தால், குடலையே பிறட்டக்கூடிய உயரத்தில் நின்று இவர்கள் 'செல்ஃபி' எடுத்தது மட்டுமல்லாமல், மிகவும் சாதாரணமாக வாழைப்பழத்தை சாப்பிட்ட வண்ணம் அந்த உயரிய ராட்சத கட்டிடத்திலிருந்து கீழே இறங்கும் காட்சியையும் பதிவு செய்திருக்கிறார்கள்.

வீடியோ...
இவர்கள் 'செல்ஃபி' எடுக்கும் வீடியோ தான் தற்போது யூடியூபில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்படுகிறது. இந்தப் பதிவைப் பார்த்து பலரும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் உறைந்து போயிருக்கிறார்கள்.

2 லட்சத்திற்கும் அதிகம்...
ஆகஸ்ட் 21- ஆம் தேதி யூடியூபில் புகைப்படவியலாளர் டானியல் லாவால் வெளியிடப்பட்ட இந்த வீடியோ, தற்போதைய நிலையில் 2,18,665 பேருக்கும் அதிகமானவர்களால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது.

பாராட்டு...
இந்த வீடியோவைப் பார்க்கும் இணையவாசிகள் இதுவரை எடுக்கப்பட்ட 'செல்ஃபி'-க்களிலேயே இது தான் மிகவும் அச்சுறுத்தக் கூடியது, டெரர் செல்ஃபி எனப் பாராட்டுகிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications