Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நேரம் வந்துவிட்டது.. வேகமாக நெருங்கும் பேரழிவு.. 2030க்கு நாள் குறித்த ஐநா!

2030ல் உலகம் மிகப்பெரிய இயற்கை பேரழிவை சந்திக்க வாய்ப்புள்ளதாக ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    2030 ஆம் ஆண்டு பேரழிவை உலகம் சந்திக்கும்-வீடியோ

    நியூயார்க்: 2030ல் உலகம் மிகப்பெரிய இயற்கை பேரழிவை சந்திக்க வாய்ப்புள்ளதாக ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.

    ஐநாவின் ''இன்டர்கவர்மெண்டல் பேனல் ஃபார் கிளைமேட் சேஞ்ச் (Intergovernmental Panel for Climate Change)'' அமைப்பு நேற்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 400 பக்கம் உள்ள அந்த அறிக்கை, மனித குலத்திற்கே மிகப்பெரிய எச்சரிக்கை விடுக்க கூடியது.

    மனிதர்கள் தற்போது இருக்கும் வாழ்க்கை முறையை கடைபிடித்தால், 2030ல் கண்டிப்பாக உலகம் நீரில் மூழ்கிவிடும் என்று எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. பூமியின் வெப்பநிலை வெகுவேகமாக உயரும் என்றும் கூறியுள்ளது.

    இப்போது என்ன

    இப்போது என்ன

    கடந்த 10 வருடங்களில் பூமியின் வெப்பநிலை வேகமாக உயர்ந்துள்ளது. சரியாக 1 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை உயர்ந்து இருக்கிறது. இது இப்போதே உலகில் பல பனிப்பாறைகளை கரைத்துவிட்டது. இந்த நிலையில் இந்த வெப்பநிலை உயரும் வேகம் இன்னும் அதிகம் ஆகும். இது பெரிய பேரழிவிற்கு கொண்டு செல்லும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.

    2030ல் என்ன நடக்கும்

    2030ல் என்ன நடக்கும்

    அதன்படி 2030ல் பூமியின் வெப்பநிலை 3.5 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரிக்கும் என்று ஐநா கூறியுள்ளது. ஆம், 3.5 செல்ஸியஸ் என்பது உலகையே அழிக்க கூடிய அளவு வெப்பநிலை ஆகும். இது கண்டிப்பாக 2030க்குள் நடந்துவிடும். அதை தாண்டி போகாது அதற்குள், இந்த மோசமான அசம்பாவிதம் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    எதனால் இப்படி

    எதனால் இப்படி

    தற்போது நாம் பயன்படுத்தும் கார், பைக் வெளியிடும் புகைகள்தான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது. 2020ல் நாம் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை அப்படியே இரு மடங்கு ஆகும். இதன் காரணமாக புகையின் அளவும் அதிகம் ஆகும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் தொழிற்சாலை புகைகள் மூன்று மடங்காக உயரும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

    என்ன நடக்க போகிறது

    என்ன நடக்க போகிறது

    இதே வேகத்தில் வெப்பநிலை உயர்ந்தால், உலகில் உள்ள முக்கிய பனிப்பாறைகள் எல்லாம் அப்படியே மொத்தமாக உருகிவிடும். இதனால் உலகில் 8- 10 சதவிகிதம் மட்டுமே நிலம் இருக்கும். மற்ற பகுதிகள் அனைத்தும் கடலுக்குள் சென்றுவிடும் என்று ஐநா எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. இதனால் அரசுகள் உடனடியாக களத்தில் இறங்கி செயல்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+