பீதியில் பிரேசில்.. 76,850 பேருக்கு ஒரேநாளில் கொரோனா தொற்று.. உலக அளவில் இதுவரை 6,366,189 பேர் பலி
கொரோனா தொற்றில் அமெரிக்கா முதலிடம், இந்தியா 2வது, பிரேசில் 3வது இடத்திலும் உள்ளன
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.66 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஒவ்வொரு உலக நாடுகளும் மும்முரமாகி வருகின்றன.
Recommended Video
இந்த 3 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.66 லட்சத்தை தாண்டிவிட்டது.
இந்த தொற்றானது, பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,366,189 பேரை தாக்கி கொன்றுள்ளது.. இன்றைய தினம், உலகம் முழுவதும் கொரோனாவால் 557,207,853 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 531,260,198 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 19,581,466 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முதல் 3 நாடுகள்
இந்த கொடூர வைரஸுக்கு எந்தவிதமான மருந்தும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.. அந்த வகையில், உலக நாடுகள் அனைத்துமே தடுப்பூசிகளை கையில் எடுத்துள்ளன.. அமெரிக்காவில் 89,894,125 பேர் கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 74,183 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1,044,455 பேர் இதுவரை அமெரிக்காவில் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.. நேற்று மட்டும் 269 பேர் உயிரிழந்துள்ளனர்.. இதுவரை 85,487,840 பேர் குணமடைந்து சென்றுவிட்டனர்.

மரணம் இல்லை
இந்தியாவை பொறுத்தவரை, மத்திய அரசு எத்தனையோ தடுப்பு மற்றும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து கொண்டுதான் வருகிறது..43,568,884 பேர் இதுவரை கொரோனாவைரஸ் தொற்றுக்கு நம் நாட்டில் பாதிப்படைந்துள்ளனர்.. 21,075 பேர் நேற்று மட்டும் ஒரே நாளில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இதுவரை 525,270 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களாகவே தொற்றால் யாருமே உயிரிழக்கவில்லை.. இதுவரை 42,907,32 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

புதுவைரஸ்
இந்த தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை.. வைரஸின் தீவிரத்தின் தாக்கத்தையும், அதன் வீரியம் மற்றும் பாதிப்பையும் குறைக்க தடுப்பூசி பாதுகாப்பாக கருதப்படுகிறது.. அந்த வகையில், இந்தியாவில் ஏற்கெனவே பல கோடிக்கணக்கான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது... தற்போதும் அந்த பணி தொடர்ந்து நடந்து வருகிறது.. ஆனாலும், இந்த வருட தொடக்கத்தில் இருந்தே, 15-18 வயதிற்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.. அதேபோல் சோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன... காரணம், புது வைரஸ் பரவுவதாக தகவல்கள் வருகின்றன.

உயிரிழப்பு
வைரஸ் பாதிப்பில் உலகில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ள நிலையில், இந்தியா 2 இடத்திலேயே பாதிப்பில் நீடித்து வருகிறது.. 3வதாக, பிரேசில் நாடு பாதிப்படைந்த நாடுகளாக இப்போதும் வருகின்றன.. இந்த நாட்டில் 32,687,680 பேர் இதுவரை அங்கு வைரஸுக்கு பாதிப்படைந்துள்ளனர்.. 76,850 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.. இதுவரை 672,829 பேர் அந்த நாட்டில் உயிரிழந்துள்ளனர்.. 335 பேர் நேற்று ஒரே நாளில் இறந்துள்ளனர்.. 31,077,538 பேர் இதுவரை குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications