தொழுகை செய்யும் போது கொல்வதா? இந்தியாவில் கூட "இப்படி" நடக்காது.. பாக். அமைச்சர் பேச்சு
"தீவிரவாதம் குறித்து பல முறை நாம் பேசிவிட்டோம். எனவே நானும் விரிவாக பேச விரும்பவில்லை. சுருக்கமாக சொல்கிறேன், ஒருகாலத்தில் தீவிரவாத விதைகளை தூவியது நாம்தான்" என பாகிஸ்தான் அமைச்சர் க்வாஜா ஆசிப் தெரிவித்தார்.
இஸ்லாமாபாத்: கடவுளை வழிபடும் போது மக்களை கொல்வது மிகவும் மோசமான செயல் என்று கூறிய பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் க்வாஜா ஆசிப், இந்தியா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் கூட இந்த அநியாயம் நடக்காது என தெரிவித்தார்.
இந்தியாவை, ஏதோ தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் நாட்டை போல குறிப்பிட்டு க்வாஜா ஆசிப் பேசியிருப்பது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
பாகிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் குறித்து நாடாளுமன்றத்தில் பேசும் போது, இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார் க்வாஜா ஆசிப்.

பயங்கர தாக்குதல்
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதி ஒன்றில் பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 100 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானை உலுக்கிய இந்த தாக்குதலை நிகழ்த்தியது தெஹ்ரிக் இ தலிபான் என்ற தீவிரவாத அமைப்பு என்பது தெரியவந்துள்ளது. தாங்கள்தான் இந்த தற்கொலை தாக்குதலை நடத்தினோம் என்பதை அந்த அமைப்பே அறிவித்துவிட்டது.

பழிக்குப் பழி
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் தங்கள் கமாண்டர் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற பயங்கர தாக்குதல்கள் இனி பாகிஸ்தானில் தொடரும் எனவும் அது எச்சரித்துள்ளது. இதையடுத்து, அந்த பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களை கூண்டோடு ஒழிக்குமாறு பாகிஸ்தான் அரசு நேற்று ராணுவத்துக்கு உத்தரவிட்டது.

"இந்தியாவில் கூட நடக்காது"
இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் க்வாஜா ஆசிப் இன்று காலை உரையாற்றினார். அவர் கூறியதாவது: பாகிஸ்தானில் ஒருகாலத்தில் தீவிரவாதம் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டது. ஆனால், முந்தைய ஆட்சியாளர்கள் சிலர் தீவிரவாத விஷயத்தில் கவனம் செலுத்தாததால் இன்று மீண்டும் அவர்கள் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடவுளை வழிபடும் போது மக்களை கொல்வது எத்தனை மோசமான செயல்.. இந்தியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளில் கூட இந்த அநியாயம் நடக்காது. ஆனால், பாகிஸ்தானில் நடைபெற்றிருக்கிறது.

"தீவிரவாத விதையை தூவினோம்"
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (PPP) ஆட்சிக்காலத்தில் தான் தீவிரவாத அமைப்புகள் நாட்டில் அதிகரிக்க தொடங்கின. பின்னர், பிஎம்எல் (என்) கட்சியின் ஆட்சிக்காலத்தில் தீவிரவாதம் முடிவுக்கு வந்தது. பின்னர் நாடு முழுவதும் அமைதி நிலைநாட்டப்பட்டது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக மீண்டும் தீவிரவாதிகள் தங்கள் வேலையை காட்ட தொடங்கியுள்ளனர். நாட்டு மக்கள், அரசியல் கட்சிகள் என அனைத்து தரப்பினரும் தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தருணம் இது. தீவிரவாதம் குறித்து பல முறை நாம் பேசிவிட்டோம். எனவே நானும் விரிவாக பேச விரும்பவில்லை. சுருக்கமாக சொல்கிறேன், ஒருகாலத்தில் தீவிரவாத விதைகளை தூவியது நாம்தான். இவ்வாறு க்வாஜா ஆசிப் கூறினார்.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்?












Click it and Unblock the Notifications