160கிமீ வேகத்தில் இங்கிலாந்தை தாக்கும் கடும்புயல்: வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை
லண்டன்: நாளை கடும் புயல் ஒன்று சுமார் 160கிமீ வேகத்தில் இங்கிலாந்தைத் தாக்க இருப்பதாக அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கடந்த 1987, 2000, 2007, 2008 ஆகிய ஆண்டுகளில் இங்கிலாந்து கடும்புயல் தாக்கத்துக்கு ஆளாகியது. கிட்டத்தட்ட பல வருடங்களுக்குப் பிறகு நாளை மணிக்கு 100 மைல் அதாவது சுமார் 160 கி.மீட்டர் வேகத்தில் கடும் புயல் ஒன்று இங்கிலாந்தை தாக்க இருப்பதாக அந்நாட்டு வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. எனவே, இப்புயலை எதிர்கொள்ளும் விதமாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதி மக்கள் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
புயலின் விளைவாக சுமார் 30 முதல் 40 செ.மீட்டர் மழையும், அதனைத் தொடர்ந்து பெரும் வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.
புயல் முன்னெச்சரிக்கை காரணமாக நாளை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் உஷார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளனர். மேலும், பிரதான சாலைகளில் உள்ள பாலங்கள் திடீரென மூடப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications