குளறுபடி: ஜப்பானில் தவறுதலாக பெண்ணின் மார்பகத்தை அகற்றிய புற்றுநோய் மையம்
டோக்கியோ: ஜப்பானில் உள்ள புற்றுநோய் மையத்தில் ஏற்பட்ட குளறுபடியால் தவறுதலாக வேறு ஒரு பெண்ணின் மார்பகம் அகற்றப்பட்டுள்ளது.
ஜப்பானின் சிபாவின் சுவோ வார்டில் இருக்கும் புற்றுநோய் மையம் ஒன்றில் கடந்த அக்டோபர் மாதம் ஒரே நாளில் இரண்டு பெண் நோயாளிகளிடம் இருந்து மாதிரிகள் பெறப்பட்டுள்ளது. அதில் ஒருவர் 30களில் உள்ளவர், மற்றொருவர் 50களில் உள்ளவர். இருவருக்கும் மார்பகத்தில் ஊசி குத்தி அதன் மூலம் திசுக்கள் பெறப்பட்டுள்ளது.

இதில் 30களில் இருக்கும் பெண்ணுக்கு புற்றுநோய் ஆரம்பக்கட்டத்தில் இருந்துள்ளது. அதற்கு மார்பகத்தை அகற்ற வேண்டியது இல்லை. ஆனால் மருத்துவமனையில் நடந்த குளறுபடியால் 30களில் இருக்கும் பெண்ணுக்கு புற்றுநோய் முற்றிவிட்டதாக தெரிவித்த மருத்துவர்கள் வலது மார்பகத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணின் வலது மார்பகம் அகற்றப்பட்டது. கடந்த 15ம் தேதி அகற்றப்பட்ட மார்பகத்தை சோதனை செய்தபோது தான் அவருக்கு புற்றுநோய் ஆரம்பக்கட்டத்தில் இருந்தது தெரிய வந்தது.
இந்த குளறுபடி தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக இதே மருத்துவமனையில் கடந்த 2008ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் லேப்ரோஸ்கோபிக் சிகிச்சை பெற்ற 11 நோயாளிகள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications