3ம் உலகப்போர் தொடங்கிவிட்டது.. 27 நாடுகளில் உள்ள 45 கோடி மக்களுக்கு பறந்த எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்யா மூன்றாம் உலகப்போரை தொடங்கியிருப்பதாகவும், எனவே 27 நாடுகளில் உள்ள சுமார் 45 கோடி மக்கள் அடுத்த 72 மணி நேரத்திற்கு தேவையான குடிநீர், உணவு உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை செய்திருக்கிறது.

இது தொடர்பான செய்தியை அசோசியேட்டட் பிரஸ் செய்தி ஊடகம் வெளியிட்டிருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் ஐரோப்பிய யூனியன் மீது ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை நடத்தும் என்று நேட்டோ (NATO) பொதுச் செயலாளர் மார்க் ருட்டே எச்சரித்திருக்கிறார்.

Russia NATO US

3ம் உலகப்போர்:

உக்ரைனுக்கும்-ரஷ்யாவுக்கு இடையே நடந்து வரும் போர் ஐரோப்பிய யூனியன் வரை விரிவடையும் என்று அமெரிக்கா அச்சம் தெரிவித்திருக்கிறது. இப்படி இருக்கையில்தான் உக்ரைனின் சுமி (Sumy) நகரம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது. இதில் 10க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் பற்றி விவரித்திருந்த ஐரோப்பிய யூனியன், 27 நாடுகளில் உள்ள 45 கோடி மக்கள் அடுத்த 72 மணி நேரத்திற்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை ரெடியாக வைத்திருக்க வேண்டும் என்றும், 3ம் உலகப்போர் தொடங்கிவிட்டது எனவும் எச்சரித்திருக்கிறது.

நேட்டோவின் எச்சரிக்கை:

நேட்டோவின் மார்க் ருட்டே கூறுகையில், "ரஷ்யா 2030 ஆம் ஆண்டிற்குள் ஐரோப்பாவில் மற்றொரு பெரிய தாக்குதலை நடத்தும்" என்று எச்சரித்துள்ளார். போலாந்து போன்ற சிறிய நாடுகள் மீது கூட ரஷ்யா தாக்குதல் நடத்தினால் அதற்கான எதிர்வினை கடுமையாக இருக்கும் என்றும் அவர் வார்னிங் கொடுத்திருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்தின் 'நெருக்கடி மேலாண்மை ஆணையர்' ஹாட்ஜா லஹ்பிப் கூட இதே அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

"தற்போது ஐரோப்பிய நாடுகள் எதிர்கொள்ளும் அபாயங்கள் மிகவும் சிக்கலானவை. ரஷ்யா முழுமையாக போர் பொருளாதார அமைப்புக்கு மாறிக்கொண்டிருக்கிறது. இதனால் அவர்களின் படைபலம் அதிகரிக்கும்" என கூறியிருக்கிறார்.

ஐரோப்பிய யூனியன் வார்னிங்:

ரஷ்யா சமீபத்தில் மேற்கொண்ட நீர்மூழ்கி கப்பலிலிருந்து இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை பயிற்சி இவர்களின் அச்சத்தை உறுதி செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. ஜப்பான் கடலில் உள்ள "Ufa" என்ற ரஷ்ய ஆயுத நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை, சுமார் 1000 கி.மீ தொலைவில் உள்ள "Khabarovsk" எனும் பகுதியில் இருந்த இலக்கை துல்லியமாக தாக்கி அழித்திருக்கிறது. இதில் 'கலிபர்' ரக ஏவுகணை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ரஷ்ய ஏவுகணையின் திறன்:

இந்த ஏவுகணையின் அதிகபட்ச தாக்குதல் தொலைவு 1500-2500 கி.மீ என சொல்லப்படுகிறது. ஆனால், இந்த ஏவுகணை 4,500 கி.மீ தொலவில் உள்ள இலக்கை கூட துல்லியமாக தாக்கி அழிக்கும் தன்மை கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் வேகம் கொஞ்சம் கம்மிதான். அதாவது இலக்கை நோக்கி புறப்படும்போது ஒலியை விட குறைவான வேகத்திலும், இலக்கை நெருங்கும்போது ஒலியை விட அதிக வேகத்திலும் இது பயணிக்கிறது. எனவே, இதன் வருகையை முன்கூட்டியே கணிப்பது சாத்தியமில்லாததாக சொல்லப்படுகிறது.

எந்தெந்த நாடுகள் பாதிக்கப்படும்?:

இந்த வகை ஏவுகணையில் சுமார் 450 கி.கி வெடி பொருள் இருக்கும். ஏவுகணை தாக்கும் பகுதியில் 50-100 மீ சுற்றளவில் புல் பூண்டு கூட முளைக்காது. இந்த ஏவுகணையின் தாக்குதல் தொலைவு 2500 கி.மீ என்பதால் சுமார் 26 ஐரோப்பிய நகரங்களை இதனால் தாக்க முடியும்.

1. உக்ரைன், கிவ்-750 கி.மீ.
2. பெலாரஸ், மின்ஸ்க் (Minsk)-675 கி.மீ.
3. லித்துவேனியா, வில்னியஸ் (Vilnius)-790 கி.மீ.
4. லாட்வியா, ரிகா (Riga)-840 கி.மீ.
5. எஸ்டோனியா, டாலின் (Tallinn)-860 கி.மீ.
6. பின்லாந்து, ஹெல்சின்கி (Helsinki)-900 கி.மீ.
7. போலந்து, வார்சா (Warsaw)-1,150 கி.மீ.
8. செக் குடியரசு, ப்ராக் (Prague)- 1,650 கி.மீ.
9. ஸ்லோவாக்கியா, பிராட்டிஸ்லாவா (Bratislava)-1,650 கி.மீ.
10. ஹங்கேரி, புடாபெஸ்ட் (Budapest)-1,570 கி.மீ.
11. ருமேனியா, புக்கரெஸ்ட் (Bucharest)-1,500 கி.மீ.
12. மால்டோவா, சிசினாவ் (Chișinău)-1,140 கி.மீ.
13. ஜெர்மனி, பெர்லின் (Berlin) -1,600 கி.மீ மற்றும் முனிச் (Munich)-1,900 கி.மீ.
14. டென்மார்க், கோபன்ஹேகன் (Copenhagen)-1,550 கி.மீ.
15. நார்வே, ஆஸ்லோ (Oslo)-1,650 கி.மீ.
16. ஸ்வீடன், ஸ்டாக்ஹோம் (Stockholm)-1,230 கி.மீ.
17. ஆஸ்திரியா, வியன்னா (Vienna)-1,670 கி.மீ.
18. குரோஷியா, ஜாக்ரெப் (Zagreb)-1,870 கி.மீ.
19. செர்பியா, பெல்கிரேட் (Belgrade)-1,710 கி.மீ.
20. பல்கேரியா, சோஃபியா (Sofia)-1,780 கி.மீ.
21. கிரீஸ், ஏதென்ஸ் (Athens) - 2,230 கி.மீ.
22. இத்தாலி, வெனிஸ் (Venice)-2,100 கி.மீ மற்றும் ரோம் (Rome)- 2,350 கி.மீ.
23. சுவிட்சர்லாந்து, சூரிச் (Zurich)-2,200 கி.மீ.
24. பிரான்ஸ், ஸ்ட்ராஸ்பர்க் (Strasbourg)-2,200 கி.மீ மற்றும் பாரிஸ் (Paris)-2,480 கி.மீ.
25. நெதர்லாந்து, ஆம்ஸ்டர்டாம் (Amsterdam)-2,150 கி.மீ.
26. பெல்ஜியம், பிரஸ்ஸல்ஸ் (Brussels)-2,250 கி.மீ.

ஆகிய நகரங்களை ரஷ்ய ஏவுகணை தாக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. எனவேதான் ஐரோப்பிய யூனியன் போர் தொடர்பாக எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+