ஜின் பிங் - பிரதமர் மோடி சந்திப்பு! 5 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மாற்றம்! உற்றுநோக்கும் உலக நாடுகள்
மாஸ்கோ: ரஷ்யாவின் காஸன் நகரில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ள சீனா அதிபர் ஜின்பிங் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்றதற்குப் பிறகு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சந்திப்பு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இந்தியா சீனா இடையே கடந்த பல ஆண்டுகளாகவே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்தியாவின் பல பகுதிகளை தங்கள் பகுதிகள் என சீனா சொந்தம் கொண்டாடி வருவது பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியா சீனா எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற ஊடுருவல் முயற்சியை இந்திய வீரர்கள் தடுத்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
அதே நேரத்தில் தங்கள் தரப்பில் நான்கு பேர் உயிரிழந்ததாக சீனா அறிவித்தது. ஆனால் 45 பேர் வரை உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. இதை ரஷ்ய செய்தி நிறுவனமும், அமெரிக்க புலனாய்வு அமைப்புகளும் கூறியிருந்தன. அப்போது மிகப் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து இந்தியா சீனா உறவுகள் பெரும் பாதிப்பை சந்தித்தது. தொடர்ந்து பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு இந்தியா சீனா இடையே சமூக உறவுகள் ஏற்பட்டது.
இந்த நிலையில் ரஷ்யாவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். அதற்கு முன்னதாக கடந்த 21ஆம் தேதி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்தியாவும் சீனாவும் லைன் ஆப் ஆக்சுவல் கண்ட்ரோல் பகுதிகளில் ரோந்து பணிகளை மேற்கொள்வது தொடர்பாக உடன்பாட்டை எட்டியதாக கூறியிருந்தது.
கடந்த பல வருடங்களாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் மோதல் இருந்த நிலையில் கடந்த சில வாரங்களில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே அரசு மற்றும் ராணுவ தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் அதன் தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டதாக கூறியிருந்தது. இதனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் உறுதி செய்திருந்தார்.
இந்த நிலையில் ரஷ்யாவின் காஸன் நகரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இது தொடர்பாக பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங்,"பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஐந்தாண்டுகளுக்கு பிறகு முறைப்படி நாம் சந்திப்பது இதுவே முதல்முறை. இருநாட்டு மக்களும் சர்வதேச சமூகமும் நமது சந்திப்பு குறித்து மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றன. இரண்டு நாடுகளும் பண்டைய நாகரீகம் கொண்ட நாடுகள். வளரும் நாடுகளாக இருக்கிறது. இந்த சந்திப்பு நமது இரு நாடுகளுக்கு இடையேயான உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்" என நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இரு நாட்டின் தலைவர்களும் முறையான சந்திப்பை நடத்தி இருக்கிறோம். இந்தியா சீனா இடையிலான உறவு இரு நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல உலகிற்கும் மிகவும் முக்கியமானது என நாங்கள் நம்புகிறோம். தற்போது இந்தியா சீன எல்லையில் கடந்த நான்கு ஆண்டுகளில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. நமது உறவுகளில் பரஸ்பர நம்பிக்கை பரஸ்பரம் மரியாதை ஆகியவைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்" என கூறினார்.
-
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்!












Click it and Unblock the Notifications