கொஞ்சம் நிம்மதி.. என் மனைவியை காப்பாத்துங்க.. ஏமனில் தூக்கு தண்டனை பெற்ற நிமிஷா கணவர் உருக்கம்
சானா: ‛‛ஏமனில் என் மனைவிக்கு தூக்கு தண்டனை அறிவித்தபோது அவள் பதற்றமானார். இப்போது தூக்கு தண்டனை தள்ளிவைக்கப்பட்டு உள்ளதால் கொஞ்சள் நிம்மதியாக இருப்பாள். அவளை இந்தியா அழைத்து வர இன்னும் பல தடைகள் உள்ளது. இருப்பினும் பத்திரமாக வீட்டுக்கு வருவாள்'' என்று ஏமனில் தூக்கு தண்டனை பெற்ற கேரளா நர்ஸ் நிமிஷா பிரியாவின் கணவர் டோமி தாமஸ் கூறியுள்ளார்.
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா. இவர் கடந்த 2008 ம் ஆண்டில் தனது 19 வயதில் ஏமன் நாட்டுக்கு சென்றார். நர்சிங் வேலையை தேடி அவர் அங்கு சென்றர். கடந்த 2020ம் ஆண்டில் ஏமன் நாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரை கொன்றதாக நிமிஷா பிரியா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

அதாவது அவர்கள் 2 பேரும் சேர்ந்து நிமிஷா பிரியா கிளினிக் தொடங்கி உள்ளார். அப்போது அவரது பாஸ்போர்ட்டை தலால் அப்தோ மஹ்தி வாங்கி வைத்துள்ளார். இதனை கைப்பற்றுவதற்காக அவருக்கு மயக்க ஊசி செலுத்தி உள்ளார். ஆனால் மயக்க மருந்து அதிகரித்ததால் அவர் இறந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் நிமிஷா பிரியாவுக்கு தூக்கு தண்டனையை வழங்கியது.
ஏமனில் நாளை நிமிஷா பிரியாவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. அவரை மீட்க மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. ஏமன் தலைநகர் சனா ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கையில் உள்ளது. இதனால் நம் நாட்டின் முயற்சிகள் தோல்வியடைந்தன.
மேலும் ஏமனை பொறுத்தவரை கொலை உள்ளிட்ட கொடூர குற்றங்களுக்கு ரத்த பணம் கொடுக்கலாம். அதாவது பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு குறிப்பிட்ட பணத்தை கொடுத்து மன்னிப்பு கேட்கலாம். குடும்பத்தினர் பணத்தை வாங்கி மன்னித்து விட்டால் விடுதலையாகலாம்.
நிமிஷா பிரியா தரப்பில் ரூ.11 கோடி வரை ரத்த பணம் கொடுக்க முன்வந்தனர். ஆனால் தலால் அப்தோ மஹ்தி குடும்பத்தினர் அந்த பணத்தை ஏற்கவில்லை. இதனால் நாளை நிமிஷா பிரியாவுக்கு தூக்கு உறுதி என்ற நிலை வந்தது. இதற்கிடையே தான் இன்று திடீரென்று கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு நாளை நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதாவது மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இறந்த தலால் அப்தோ மஹ்தியின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
நம் நாட்டின் கிராண்ட் முஃப்தி என்று அழைக்கப்படும் காந்தபுரம் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார் எடுத்த முயற்சியே இதற்கு காரணம். சன்னி பிரிவு இஸ்லாமியர்களில் முக்கியமானவராக இருக்கும் இவர் ஹவுதி தரப்பு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தூக்கு தண்டனை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தலால் அப்தோ மஹ்தியின் குடும்பத்தினரும் நிமிஷா பிரியா தரப்பிடம் பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளனர்.
இந்நிலையில் தான் நிமிஷா பிரியாவின் கணவர் டோமி தாமஸ் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். டோமி தாமஸ் கோவையில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணியற்றி வருகிறார். இதுபற்றி டோமி தாமஸ் கூறுகையில், ‛‛எனக்கு நிம்மதியாக இருக்கிறது. இது ஒரு அடித்தளம் தான். இந்த அடித்தளத்தை பயன்படுத்தி என் மனைவியின் விடுதலைக்கு வழிவகை செய்ய வேண்டும். இன்னும் பல தடைகள் உள்ளன. இருப்பினும் அவளால் வீடு திரும்ப முடியும் என்று நம்புகிறோம். (மரணதண்டனை தேதி) உத்தரவு வந்தபோது, அவள் பதற்றமாக இருந்தாள். இப்போது நம்பிக்கையுடன் கொஞ்சம் நிம்மதியாக இருப்பாள். தியா (இரத்தப் பணம்) மூலம் ஒரு தீர்வை எட்ட முடிந்தால், அவளை விடுவிக்க முடியும்.












Click it and Unblock the Notifications