"மக்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளீர்கள்.." பிரதமர் மோடியை பாராட்டி பேசிய புதின்
மாஸ்கோ: ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடியை வரவேற்று பேசிய புதின், "நீங்கள் மிகவும் ஆற்றல் மிக்க நபர். இந்தியா மற்றும் இந்திய மக்களின் நலன்கள் குறித்த முடிவுகளை எவ்வாறு எடுப்பது என்பது உங்களுக்குத் தெரியும் என்று புகழ்ந்து பேசினார். இந்தியா - ரஷ்யா இடையேயான 22-வது உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது.
இந்தியா - ரஷ்யா இடையேயான 22-வது உச்சி மாநாடு மாஸ்கோவில் இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ரஷ்யா சென்றார். ரஷ்யாவில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

ரஷ்யாவில் மோடி: மாஸ்கோ விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ரஷ்யாவின் துணை பிரதமர் டெனிஸ் மன்டுரோவ் வரவேற்றார். அதன்பிறகு பிரதமர் மோடிக்கு ராணு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினரும் இந்திய தேசிய கொடியுடன் வந்து மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி ரஷ்யா சென்றுள்ளார்.
மோடிக்கு உணவு விருந்து: அதாவது ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கிய பிறகு அவர் செல்வதும் இதுவே முதல்முறை ஆகும். ஸ்கோ விமான நிலையம் சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து புதினின் நோவோ-ஓகாரியோவோவில் உள்ள் அதிபர் இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதிபர் இல்லத்தில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடியை பார்த்ததும் சிரித்த முகத்துடன் புதின் வரவேற்றார். இதையடுத்து பிரதமர் மோடிக்கு நேற்று இரவு, புதின் விருந்து அளித்தார்.
மோடியை பாராட்டிய புதின்: முன்னதாக மோடியை வரவேற்று பேசிய புதின் கூறியதாவது:- மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். இது தற்செயலானது இல்லை என நான் நினைக்கிறேன். உங்கள் நாட்டின் தலைவராக பல ஆண்டுகளாக உழைத்தற்காக கிடைத்த பலனாக பார்க்கிறேன். நீங்கள் மிகவும் ஆற்றல் மிக்க நபர்.
இந்தியாவின் நலன்கள் குறித்த முடிவுகளை எவ்வாறு எடுப்பது என்பது உங்களுக்கு தெரியும். உங்கள் முழு வாழ்க்கையையும் நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்து உள்ளீர்கள். இதனை இந்திய மக்களும் நன்கு அறிவார்கள். உங்களை பார்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
22-வது உச்சி மாநாடு: இந்தியா - ரஷ்யா இடையேயான 22-வது உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது. இதில் புதினும் மோடியும் சந்தித்து பேசுகிறார்கள். இந்த சந்திப்பின் போது, இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது பற்றி விவாதிக்க உள்ளனர். பரஸ்பர நலன்சார்ந்த பிராந்திய, சர்வதேச பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவம், வர்த்தகம், முதலீட்டு உறவு, எரிசக்தி ஒத்துழைப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி, கலாசாரம், மக்களிடையிலான உறவு ஆகியவற்றில் இருதரப்பு உறவு குறித்து இருவரும் பேசுகிறார்கள்.












Click it and Unblock the Notifications