பலாத்கார வெறி.. நெருங்கி வந்த இளைஞன்.. இளம்பெண் சொன்ன அந்த வார்த்தை.. தெறித்து ஓடிய சபலிஸ்ட்!

பலாத்காரம் செய்ய நெருங்கிய இளைஞன் தெறித்து ஓடி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: இளம்பெண்ணை பார்த்ததும்.. உச்சக்கட்ட மோகத்துடன்.. பலாத்காரம் செய்ய ஆசை ஆசையாக வந்தார் ஒரு சபலிஸ்ட்.. ஆனால் அந்த பெண் சொன்ன அந்த ஒத்த வார்த்தையை கேட்டதும் துண்டை காணோம், துணியை காணோம் என்று அலறி அடித்து ஓடிவிட்டார். அந்த வார்த்தை என்ன தெரியுமா?

சீனாவின் வூகான் நகரில் இருந்து சற்று அருகில் உள்ள பகுதி ஜிங்ஷான்.. அதாவது வூகானில் இருந்து 3 மணி நேரம் பயணம்தான்.. இந்த வூகான் நகரில்தான் கொரோனா வைரஸ் துவங்கியது என்பது நமக்கு தெரிந்த விஷயம்தான்!

Recommended Video

    Is China hiding the real numbers of the Coronavirus ? | சீனா பலி எண்ணிக்கையை மறைக்கிறதா?

    ஜிங்ஷான் நகரில் 25 வயது பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார்.. அவர் வீட்டுக்கு ஒரு திருடன் வந்துவிட்டான்.. வீட்டில் இருந்து பொருட்களை லவட்டி கொண்ட திருடன்.. அப்படியே ஒவ்வொரு ரூமிலும் எட்டி பார்த்து வந்தார்.

    கொள்ளையன்

    கொள்ளையன்

    ஒரு பெட்ரூமில் இந்த இளம் பெண் தூங்கி கொண்டிருந்தார். அவருடன் வேறு யாருமில்லை.. தனியாக தான் படுத்திருந்தார். அந்த பெண்ணை பார்த்ததும் கொள்ளையனுக்கு ஆசை வந்துவிட்டது.. எப்படியாவது அதே படுக்கையில் அந்த பெண்ணை அனுபவித்து விட வேண்டும் என்று பலாத்காரம் செய்யும் நோக்கில் நெருங்கினான். கொள்ளையன் பக்கத்தில் வந்ததும் பெண் கண் விழித்து கொண்டார்.. தன்னை பலாத்காரம் செய்யும் நோக்கில்தான் வந்துள்ளார் என்பதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    பலாத்காரம்

    பலாத்காரம்

    அதனால் கத்தி கூச்சல் போட முயன்றார்.. ஆனால் அந்த கொள்ளையன் அதற்குள் அவரது கழுத்தை கெட்டியாக நெறித்து பிடித்தான்.. வாயையும் தன் கைகளால் இறுக்கி மூடி, பலாத்காரம் செய்ய முயன்றான்.. அதனால் அந்த பெண்ணுக்கு திடீரென ஒரு ஐடியா தோன்றியது.. டக்கென பயங்கரமாக இரும ஆரம்பித்தார்.. லொக் லொக்கென முடிந்தவரை கஷ்டப்பட்டு இருமினார்.. இதனால் அந்த கொள்ளையன் அப்படியே நின்றான்.

    இருமல்

    இருமல்

    உடனே பெண், "நான் இப்பதான வூகான் நகரில் இருந்து வந்திருக்கேன்.. கொரோனா இருக்கு போல.. அதான் என்னை தனியா படுக்க வைச்சிட்டாங்க" என்று சொல்லி கொண்டே வேகவேகமாக இருமினார். அவ்வளவுதான்.. "கொரோனா" என்ற வார்த்தையை கேட்டதுமே.. காம வெறி நபர், தலைதெறிக்க ஓடினார்.. ஆனாலும் பெண் விடவில்லையே.. உடனே போலீசுக்கு போன் செய்து விஷயத்தை சொன்னார்.. போலீசாரும் அந்த நபரை பிடிக்க முயற்சித்தனர்.

    கைது

    கைது

    ஆனால் ஒரு சிக்கல் வந்துவிட்டது.. அந்த ஊரில் எல்லாருமே வைரஸ் பரவி விடகூடாது என்று முகமூடி அணிந்திருக்கிறார்கள்.. அதனால் நிஜ முகமூடிக்காரன் யார் என்றே தெரியாமல் விசாரணையில் மந்தநிலை ஏற்பட்டது. கடைசியில் ஒருவழியாக அந்த சபலிஸ்ட்டை போலீசார் பிடித்துவிட்டனர்.. 25 வயதான அந்த நபர் இப்போது சிறையில் உள்ளார்.. எல்லாரையும் மனசாட்சியே இல்லாமல் கொன்று வரும் கொரோனா.. ஒரு இளம் பெண்ணை காப்பாற்றி உள்ளது ஆச்சரியம்தான்!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+