20 வயது வாலிபருக்கு லாட்டரியில் அடித்த ரூ. 80 கோடி.. மறுநாளே அவர் செய்த காரியம்தான்.. சபாஷ்!
துபாய்: கஷ்டப்பட்டு வறுமை நிலையில் இருந்தாலும் கூட திடீரென லாட்டரியில் பல கோடி ரூபாய் பணம் அடித்து விட்டால் பலரும் தலைகால் புரியாமல் மாறிவிடுவார்கள். நாமதான் கோடீஸ்வர் ஆயிட்டோமே.. இனி பழசை எல்லாம் நினைக்க கூடாது என்று சிலர் நினைப்பார்கள். ஆனால் லாட்டரியில் 80 கோடி ரூபாய் பணம் அடித்த போதும் கூட, வடிகால்களை பராமரிக்கும் பணியை தொடர்ந்து செய்கிறார் இளைஞர். இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
சூர்ய வம்சம் சரத்குமார் போல ஒரே பாட்டில் ஒஹோ என ஆக வேண்டும் என்றால் லாட்டரியில் பணம் அடித்தால்தான் உண்டு என சொல்வதை கேள்வி பட்டு இருப்போம். லாட்டரியில் பணம் அடித்தவர்களை விட அதில் பணத்தை விட்டவர்கள்தான் அதிகம் என்றாலும் ஒரு சிலருக்கு அதிர்ஷ்டம் உச்சியில் கொண்டு விட்டு விடுகிறது.

கிறிஸ்துமஸ் நேஷனல் லாட்டரி
கை செலவுக்கு கூட பணம் இல்லாத சிலர் கூட திடீரென லாட்டரியில் பணம் அடித்து பல கோடிக்கு அதிபதியாகி விடுகிறார்கள். இந்தியாவில் கூட சில நேரங்களில் இத்தகைய நிகழ்வுகளை பார்க்க முடியும். பொதுவாக லாட்டரியில் பணம் அடித்துவிட்டால், இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு வேலை செய்தது போதும்.. இனி வேறு எதாவது இந்த பணத்தை வைத்து செய்யலாம் என்று நினைப்பார்கள். ஆனால், இங்கிலாந்தை சேர்ந்த 20 வயதே ஆன இளைஞர் ஒருவருக்கு லாட்டரியில் 80 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. ஆனால், மறுநாளே அவர் செய்ததுதான் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
இங்கிலாந்தை சேர்ந்தவர் கார்லிஸில் கிளர்க்சன்( வயது 20). கேஸ் இன்ஜினியராக பணியாற்றி வரும் இவருக்கு லோட்டோ ஜாக்பாட் லாட்டரி விளையாடும் பழக்கம் இருந்துள்ளது. அவ்வப்போது சிறிய தொகையை வென்று வந்து இருக்கிறார். சமீபத்தில் கூட கிறிஸ்துமஸ் நேஷனல் லாட்டரியில் 120 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் 12,676) பரிசுத்தொகை கிடைத்தது. சிறிய தொகை என்பதால் பரிசாக கிடைத்த முழு பணத்திற்கும் லாட்டரியை வாங்கியிருக்கிறார். இதில்தான் அவரது தலைவிதியே மாறிவிட்டது.
ரூ.79.58 கோடி லாட்டரி பரிசு
ஆமாம், இவருக்கு 7.5 மில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.79.58 கோடி) ஜாக்பாட் அடித்துள்ளது. இவ்வளவு பெரிய தொகை விழுந்த போதும் கூட பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் மறுநாளே தனது வழக்கமான பணிக்கு சென்று இருக்கிறார். வடிகால்களில் அடைப்பு இருந்தால் அதை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை செய்து வரும் இவர்.. கோடீஸ்வரர் ஆன போதும் கூட மறுநாளே தனது வேலைக்கு சென்று விட்டார்.
எந்த பந்தா, சலனம் கட்டாமல்
இவ்வளவு பெரிய தொகை லாட்டரியில் பரிசாக விழுந்தாலும் கூட எந்த பந்தா, சலனம் கட்டாமல் பணியை செய்ய சென்றது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இது குறித்து கிளர்க்சன் கூறுகையில், “நான் எனது பெண் தோழி வீட்டில் இருந்தேன். அன்றைய தினம் காலையிலேயே விழித்துவிட்டதால் குளிர் எப்படி இருக்கிறது என பார்க்க வெளியே சென்றேன். அப்போது எனது செல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்றும் வந்தது. அதில் நேஷனல் லாட்டரியில் பரிசுத்தொகை விழுந்ததாக கூறப்பட்டு இருந்தது. முதலில் இதை நான் நம்பவே இல்லை.
ஒருவேளை கனவுதான் வந்து இருக்கிறது போல என முதலில் நினைத்தேன். உடனடியாக எனது தந்தைக்குக் போன் செய்து விஷயத்தை சொன்னேன். அவரும் வீட்டுக்கு வா.. பார்த்துக்கொள்ளலாம் என்று கூறினார். வீட்டிற்கு போனதும் எனது சகோதரர், தந்தை என அனைவரும் எப்போது 9 மணி ஆகும் என காத்திருந்தோம். லாட்டரி அலுவலகம் திறந்ததும் போன் செய்து வின்னிங் நம்பரை உறுதி செய்து கொண்டோம். எனக்குத்தான் பரிசு விழுந்துள்ளது என்பதை உணர்ந்ததும் பயித்தியம் பிடித்தது போல கத்தினேன்.
வேலை செய்வதை நிறுத்த மாட்டேன்
எங்கள் வீட்டில் அனைவருமே இப்போது இந்த லாட்டரியில் விழுந்த பரிசு பற்றித்தான் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். என்னுடைய குடும்பம் பெரியது. அனைவருக்கும் இந்த விஷயம் தெரிந்து விட்டது” என்றார்.. இவ்வளவு தொகை பரிசாக விழுந்தாலும் கூட, தனது வழக்கமான பராமரிப்பு பணிகளுக்கு செல்ல தொடங்கிவிட்டாராம். இது குறித்து அவர் கூறுகையில், ’பனிக்கட்டிகள் அடைத்துள்ள வடிகால்களை சுத்தம் செய்ய வேண்டியிருக்கிறது. நான் வேலை செய்வதை நிறுத்த போவது இல்லை’ என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications