For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னங்கடா இது.. உடலுறவு இல்லாமலேயே.. இப்படிகூட நடக்குமா.. அதுவும் 15 நிமிஷத்தில்.. ஷாக்..!

காற்றிலேயே ஒரு பெண் கர்ப்பம் அடைந்து குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார்

Google Oneindia Tamil News

ஜகார்த்தா: இதெல்லாம் நம்பறதா வேணாமான்னு தெரியல.. ஒரு பெண் காற்றிலேயே கர்ப்பம் அடைந்துள்ளார்.. அதாவது திடீரென்று காற்று அந்த பெண்ணின் பிறப்புறுப்பு வழியாக போனதால் கர்ப்பம் அடைந்தாராம்.. அடுத்த 15வது நிமிஷம் அவருக்கு குழந்தையே பிறந்துவிட்டதாம்..!

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா பகுதியில் சியாஜூர் என்ற நகரம் உள்ளது.. இங்குதான் இந்த அதிசயம் நடந்துள்ளது.. இங்கு வசித்து வந்தவர் சிதி சைனா.. 25 வயதாகிறது.. இவர்தான் இப்படி ஒரு கிலியை கிளப்பி உள்ளார்.

சம்பவத்தன்று, பிரார்த்தனையை முடித்துவிட்டு, வீட்டில் வந்து உட்கார்ந்துள்ளார்.. தரையில் முகத்தை கீழே சாய்த்தவாறு படுத்திருந்திருக்கிறார்..

 அதிசயம்

அதிசயம்

அப்போதுதான் காற்று வேகமாக அடித்துள்ளது.. உடம்புக்குள்ளே அதாவது பிறப்புறுப்பு வழியாக காற்று உள்ளே நுழைந்ததாம்.. திடீரென வயிறு வலிக்க ஆரம்பித்துள்ளது.. பிறகு வயிறு பெரிதாக இருப்பதுபோல அந்த பெண் உணர்ந்துள்ளார்.. அடுத்த 15வது நிமிஷம் ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார்..

 குழந்தை

குழந்தை

அங்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த கர்ப்பத்துக்கு காரணம் காற்று என்றும், உடலுறவு இல்லவே இல்லை என்றும் அடித்து சொல்கிறார் அந்த பெண். இந்த விஷயம் அந்த கிராமம் முழுவதும் பரவியது.. அடுத்து போலீசுக்கும் விஷயம் போனது.. சம்பந்தப்பட்ட பெண்ணை போலீசார் விசாரித்தனர்..

விசாரணை

விசாரணை

அவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி, டைவர்ஸ் ஆகிவிட்டது.. ஒரு குழந்தையும் இருக்கிறது. கணவர் இவரை விட்டு பிரிந்து போய் 4 மாசமாகிறதாம்.. இருந்தாலும் அவரிடம் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.. ஆனாலும், இந்த சம்பவம் பெருத்த குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.. வேறு யார் மூலமாவது அந்த பெண் கர்ப்பமாகி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.. எனினும், அந்த பகுதி மக்களுக்கு இந்த சம்பவம் ஆச்சரியத்தை தந்து வருகிறது..

கர்ப்பம்

கர்ப்பம்

இது ரகசிய கர்ப்பத்தின் ஒரு சந்தர்ப்பமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.. பிரசவத்திற்குள் நுழையும் வரை தாய் தனது கர்ப்பத்தைப் பற்றி அறிந்திருக்க மாட்டார்.. இதன்பெயர்தான் ரகசிய கர்ப்பம். ஏற்கனவே இந்தோனேசியாவில் இப்படித்தான் பல சம்பவங்கள் நடந்ததாக சொல்கிறார்கள்.. இதை எப்படி ஏற்பது? எப்படி நம்புவது? விஞ்ஞானமா? மெய்ஞ்ஞானமா? எதுவுமே புரியவில்லையே..

English summary
Young Woman says, gust of wind made her pregnant gives birth to baby
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X