மொத்தமாக மாறப்போகும் இந்தியா.. இனி இந்த வாகனங்கள் மட்டும்தான் - மயில்சாமி அண்ணாதுரை
கோவை: இருசக்கர வாகனம் உலக அளவில் அதிகமாக இருக்கக்கூடிய நாடாக இந்தியா உள்ளது. அதேபோல, மின்சார வாகனம் அதிகமாக உள்ள நாடாக இந்தியா உருவாகும். அனைவரும் பேட்டரி வாகனங்கள் வாங்கினால் தான் பசுமையான உலகத்திற்கு நாம் செல்ல முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளாா்.
கோவை மாவட்டம், அரசூர் பகுதியில் ஓசோடெக் நிறுவனத்தின் சார்பில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் புதிய மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று மின்சார வாகனங்களை அறிமுகம் செய்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது: ரூ. 34 ஆயிரம் முதல் ரூ. 84 ஆயிரம் வரையிலான மின்சார வாகனங்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்களும் இந்த வாகனங்களைப் பயன்படுத்தும் வகையில் 295 கிலோ வரை எடையை எடுத்துக் கொண்டு போகலாம். இந்த வாகனத்தில் பேட்டரி பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அம்சங்களும் இந்த வாகனத்தில் உள்ளன.

இருசக்கர வாகனம் உலக அளவில் அதிகமாக இருக்கக்கூடிய நாடாக இந்தியா உள்ளது. அதேபோல, மின்சார வாகனம் அதிகமாக உள்ள நாடாக இந்தியா உருவாகும். சேட்டிலைட் அனுப்பும்போது பேட்டரி என்பது சிறப்பாக இருக்க வேண்டும். பேட்டரியை கவனிக்காததால் சேட்டிலைட் வெடித்த காலங்களும் உண்டு. அதையும் தாண்டி நல்ல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டதால் சேட்டிலைட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. பல கோடி ரூபாயில் செய்த செயற்கைக்கோள் பயனடையும்போது பேட்டரி என்பது மிக முக்கியம்.
அனைவரும் பேட்டரி வாகனங்கள் வாங்கினால் தான் பசுமையான உலகத்திற்கு நாம் செல்ல முடியும். சாட்டிலைட் பேட்டரிக்கு அடுத்தபடி அதேபோல் ஒரு பேட்டரி என்பது இந்த வாகனத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. கரியை கக்கதா மின்சார உற்பத்தியை உருவாக்கும் போது பசுமையான இந்தியா உலகத்திற்கு நாம் போக முடியும்.
இப்போது இருக்கக்கூடிய விண்வெளி அமைப்பில் நாம் நீர் உள்ளிட்ட அனைத்தும் எடுத்துக் கொண்டு செல்லக்கூடிய நிலைமை உள்ளது. ஆனால், சீனாவில் நீர் ஆதாரம் இருக்கிறது. அங்கு விவசாயம் செய்யக்கூடிய அனைத்தும் இருக்கிறது. இந்தியாவை பொருத்தவரை நிலவில் ஒரு மையம் அமைப்பது சரி.
குலசேகரப்பட்டினத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு முக்கியமான தேவை என்பது அடிப்படை வசதிகள், அது இருந்தால் சில மாதங்களில் ராக்கெட் லான்ச் செய்ய முடியும். சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து வந்த சுனிதா வில்லியம் ,உடலில் தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால்
45 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பது அவசியம் என்றார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications