இளம் காதல் ஜோடி அடித்து உதைத்து நிர்வாணமாக ஊர்வலம் - ஜார்க்கண்டில் அதிர்ச்சி
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இளம் காதல் ஜோடியை அடித்து மிதித்து நிர்வாணமாக ஊர்வலம் வரச்செய்துள்ளனர். அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த ஜோடியை மீட்டதோடு, அடித்து அவமானப்படுத்தியவர்களை கைது
தும்கா- ஜார்கண்ட்: வட மாநிலங்களில் கிராம பஞ்சாயத்துக்களில் தண்டனைகள் கடுமையானதாக இருக்கும். நிர்வாண ஊர்வலம், கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மேல் ஏற்றுவது என அசிங்கமாக தண்டனை கொடுத்து அவமானப்படுத்துவார்கள். ஜார்க்கண்ட் மாநிலத்திலும் இதே போல இளம் ஜோடியின் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக வரச்செய்தனர்.
தும்கா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில்தான் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. இளம் காதல் ஜோடி தனியாக இருந்ததைப் பார்த்த அந்த கிராம மக்கள் சிலர் பஞ்சாயத்தில் நிறுத்தி விட்டனர். பஞ்சாயத்தார் கொடுத்த தண்டனையோ படு பயங்கரமானது. சொம்பில் தண்ணீரை குடித்துக்கொண்டே அவங்க துணிமணிகளை கழட்டுங்கடா என்று உத்தரவு போட்டு விட்டார்.

அடித்து துவச்சி ஊர்வலம் விடுங்கடா என்று நாட்டாமை சொன்ன தீர்ப்பை கேட்டு அதை அப்படியே செயல்படுத்தி விட்டனர் கிராம மக்கள். இதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வைரலானது.
பதறிப்போன போலீஸ் சம்பவ இடத்திற்கு போய் பரிதாபகரமான அந்த ஜோடியை மீட்டது. அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது எங்க பஞ்சாயத்து உத்தரவு நீங்க எப்படி தலையிடலாம் என்றும் கேட்டனர். அந்த கும்பலை அடித்து அள்ளிப்போட்டுக்கொண்டது போலீஸ். பாதிக்கப்பட்ட அந்த ஜோடியினரை பத்திரமாக பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். அந்த ஜோடிக்கு எதனால் அப்படி ஒரு கொடூரமான தண்டனை கொடுத்தார்கள் என்று கடைசி வரைக்கும் சொல்லவேயில்லை.
கடந்த ஆண்டு இதேபோல ராஜஸ்தான் மாநிலத்தில் பழங்குடியின மக்கள் ஒரு கள்ளக்காதல் ஜோடியை இப்படித்தான் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக கொண்டு சென்றனர். அதை வீடியோ எடுத்து வைரலாக்கினர். இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் அந்த ஜோடியை மீட்டதோடு 5 பேரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் எங்கேயோ போயிருச்சு ஆனா இவங்க இன்னமும் கற்காலத்திலேயே இருக்காங்களே.
-
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications