காஞ்சிபுரம் அருகே சுற்றுலா சென்று காரில் வீடு திரும்பிய போது விபத்து.. இருவர் பலி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே விடுமுறையில் ஆன்மீக சுற்றுலா சென்று காரில் வீடு திரும்பிய போது விபத்தில் இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த தாம்பரம் சாய் நகர் பகுதியை சேர்ந்த ஸ்ரீநாத் குடும்பத்தினர் தீபாவளி விடுமுறையில் ஆன்மீக சுற்றுலாவுக்காக காஞ்சிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து கோவிலை சுற்றி பார்த்து காஞ்சிபுரம் வந்து விட்டு பின்னர் திரும்பி சென்னை செல்லும்போது மழையின் காரணமாக வாலாஜாபாத் அடுத்த நத்தாநல்லூர் பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.

காரில் பின்புறத்தில் அமர்ந்திருந்த ராஜன் (65), கனகம் (55) என இருவர் விபத்தில் சம்பவ இடத்திலே பலியாகிவிட்டனர். காரின் முன் பகுதியில் அமர்ந்திருந்த ஸ்ரீநாத் (34) , ஐஸ்வர்யா (29), அனந்தராஜ் (2) ஆகியோர் காரில் ஏர்பேக் இருந்ததால் உயிர் தப்பினர்.

இவர்கள் படுகாயத்துடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி செய்து மேல்சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இறந்தவர்களின் உடல்களை மீட்ட வாலாஜாபாத் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-
கும்மிடிப்பூண்டி சிறுமி உடலில் அதிக ரத்தப்போக்கு! மூச்சு பேச்சு இல்லை! ஸ்டான்லி மருத்துவர் விளக்கம் -
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை- காவல் துறை விளக்கம் -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications