ஒரே நாளில் 5 லட்சம் பேர் தரிசனம்.. இத்தனை கோடி வசூலா? வியக்க வைக்கும் அத்தி வரதர் கோவில்!
அத்திவரதர் கோவிலில் நேற்று ஒரே நாளில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
Recommended Video
காஞ்சிபுரம்: அத்திவரதர் கோவிலில் நேற்று ஒரே நாளில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
கடந்த ஜூலை 1-ம் தேதி குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை தற்போது நாடு முழுக்க பிரபலமாகி உள்ளது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இவர் எழுந்தருளுவார் என்பதால், இவரை தரிசிக்க பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கில் தினமும் பக்தர்கள் வருகிறார்கள்.
இந்த சிலை இரண்டு நாட்களில் மீண்டும் குளத்தில் வைக்கப்பட உள்ளது . 48-வது நாளான ஆகஸ்ட் 17-ல் அத்திவரதர் சிலை மீண்டும் குளத்தில் வைக்கப்பட உள்ளது. இதனால் 16-ம் தேதி வரை மட்டுமே பக்தர் தரிசனத்துக்கு வைக்கப்படும்.

எத்தனை பேர் தரிசனம்
இந்நிலையில் கடந்த 44 நாட்களாக நடைபெற்று வரும் காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் பல லட்சம் மக்கள் தினமும் தரிசனம் செய்து வருகிறார்கள். தொடக்கத்தில் ஒரு நாளைக்கு 10-15 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர். ஆனால் போக போக தினமும் ஒரு லட்சம் பேர் வரை அந்த கோவிலில் தரிசனம் செய்தனர்.

எப்படி
கடைசி 10 நாட்களில் தினமும் 2-3 லட்சம் பேர் கோவிலில் தரிசனம் செய்கிறார்கள். நள்ளிரவில் இருந்து காத்திருந்து தரிசனம் செய்யும் மக்கள், பல மணி நேரங்கள் வரிசையில் நிற்கவும் தயாராக இருக்கிறார்கள். மிக முக்கியமாக விழா நாட்களில், ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் அதிக அளவில் மக்கள் கோவிலில் தரிசனம் செய்கிறார்கள்.

நேற்று என்ன
நேற்று ஒரே நாளில் 5 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க குவிந்தனர். இரவு 7 மணி வரை 3 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்தனர். மேலும் 2 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க வரிசையில் நின்று கொண்டு இருந்தனர். நேற்று காஞ்சியில் மழை பெய்ததை கூட மக்கள் பொருட்படுத்தவில்லை.

உண்டியல்
இதனால் கடந்த 44 நாட்களில் அத்திவரதர் கோவிலில் ரூ. 6 கோடியே 81 லட்ச ரூபாய் ரொக்க பணமாக உண்டியலில் போடப்பட்டுள்ளது. 87 கிராம் தங்கமும், 2507 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர். இன்னும் இரண்டு நாட்களில் இன்னும் பல லட்சங்கள் காணிக்கையாக அளிக்கப்பட வாய்ப்புள்ளது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications