"எலும்புக்கூடா" போச்சே.. குளக்கரையில் காருக்குள் ஜோடி.. திடீர்னு அந்த சம்பவம்.. விக்கித்த காஞ்சிபுரம்

காதலி மீதுள்ள கோபத்தில் 70 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை தீ வைத்து எரித்துவிட்டார் இளைஞர்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: குளக்கரையில், காருக்குள் காதலனும் - காதலியும் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென தகராறு வெடித்துவிட்டது.. இதனால் உச்சக்கட்ட ஆத்திரத்துக்கு சென்ற இளைஞர் செய்த காரியம், காஞ்சிபுரம் மக்களை அதிர செய்துள்ளது.

காஞ்சிபுரம் அடுத்துள்ளது ராஜகுளம் என்ற பகுதி.. இங்குள்ள குளக்கரை அருகே பென்ஸ் சொகுசு கார் ஒன்று நேற்றிரவு வந்து நின்றது.. அந்த காருக்குள் காதல் ஜோடி ஒன்று உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தது.

என்ன ஆனதோ தெரியவில்லை.. திடீரென 2 பேருக்குள்ளம் வாக்குவாதம் வந்துவிட்டது.. இதனால் ஆத்திரம் அடைந்த காதலர்கள் 2 பேரும் காரை விட்டு கீழே இறங்கி வந்து மறுபடியும் சண்டை போட்டுக் கொண்டார்கள்.

 எலும்புக்கூடு

எலும்புக்கூடு

2 பேருமே ஒருவரையொருவர் கடுமையாக திட்டி கொண்டார்கள்.. ஒரு கட்டத்தில், காதலன் ஆவேசம் ஆகிவிட்டார்.. காதலி மீதிருந்த கோபத்தில், திடீரென தன்னுடைய காருக்கு தீ வைத்து கொளுத்திவிட்டார். இரவு நேரம் என்பதால், காற்றின் வேகத்திற்கு, அந்த தீ மளமளவென பரவி, கார் முழுவதும் பற்றிக்கொண்டு எரிந்தது... குளக்கரை அருகே கார் தீப்பற்றி எரிவதை கண்டு சந்தேகம் அடைந்த அந்த பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர்... அப்போதுதான், காதல் ஜோடிக்குள் ஏற்பட்ட தகராறில் கார் எரிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

 சொகுசு கார்

சொகுசு கார்

இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.. தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து காரில் பற்றிய தீயை அணைத்தனர்... ஆனால் அந்த கார் முழுவதுவமாக எரிந்து எலும்புக்கூடு போல காட்சி அளித்தது.. பிறகு, போலீசார் அங்கிருந்த காதல் ஜோடியிடம் விசாரணை நடத்தினர்... அந்த காதலன் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த கவின்.. இவர் ஒரு டாக்டராம்.. 28 வயதாகிறது.. காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில், கடந்த வருடம்தான் டாக்டருக்கு படித்து முடித்துள்ளார்.

 பென்ஸ் கார்

பென்ஸ் கார்

இதே காலேஜில் படித்த மாணவியை அவர் காதலித்துள்ளார்.. படிப்பு முடிந்தாலும், காததல் தொடர்ந்துள்ளது.. 2 பேருமே நெருங்கி பழகி வந்துள்ளனர்.. நேற்று மாலை மாணவியை சந்திக்க காதலன் வந்துள்ளார். 2 பேரும் காரில் சுற்றியபடி, காஞ்சிபுரம் ராஜகுளம் குளக்கரை அருகே காரை நிறுத்திவிட்டு பேசியபடி இருந்து உள்ளனர். அப்போதுதான், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு வெடித்துள்ளது.. அந்த கோபத்தில், காதலனுடன் பேச மறுத்தாராம் அந்த பெண்.. இதுதான் காதலனுக்கு ஆத்திரம் அதிகமாகி, தன்னுடைய காரையே பெட்ரோலை ஊற்றி, கொளுத்தும் அளவுக்கும் போய்விட்டது.

 ஆக்‌ஷன்

ஆக்‌ஷன்

ரூ.70 லட்சம் ரூபாய் மதிப்பு வாய்ந்த சொகுசு கார், கொஞ்ச நேரத்தில் கருகிவிட்டது.. பென்ஸ் காரை தீவைத்து எரித்தது தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்... ஆனால், கார் எரிப்பு தொடர்பாக எந்த மாதிரியான ஆக்‌ஷன் எடுப்பது என்பது குறித்து ஆலோசித்து வருகிறார்கள்... காதலி பேச மறுத்ததால், தன்னுடைய 70 லட்சம் ரூபாய் காரையே தீவைத்து எரித்த சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோபத்துக்கு ஒரு அளவு வேணாமா? அதுக்காக 70 லட்சம் காரையா கொளுத்துவது என்று நெட்டிசன்கள் அந்த டாக்டரை கடிந்து கொண்டு வருகிறார்கள்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+