காஞ்சிபுரத்தில் சாமி ஊர்வலத்தில் மாணவிக்கு ஷாக்.. ஜெனரேட்டரில் சிக்கிய தலைமுடி.. துடிதுடித்து பலி
காஞ்சிபுரம் அருகே கோவில் திருவிழாவில் சாமி ஊர்வலத்தில் ஜெனரேட்டரில் தலை முடி சிக்கியதால் பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கோவில் திருவிழாவில் சாமி ஊர்வலத்தில் ஜெனரேட்டரில் தலை முடி சிக்கியதால் பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சீபுரத்தை அடுத்த களக்காட்டூர் அருகே உள்ளதுவிச் சாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் காண்டீபன். இவரது மனைவி லதா. இவர்களுடைய 3-வது மகள் காஞ்சனாவை சென்னையை சேர்ந்த கூலிதொழிலாளி சரவணன் என்பவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்தார்கள்.
இவர்களது மகள் லாவண்யா (13). மகன் புவனேஷ் (9). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சனா குடும்பத்தகராறு காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாட்டி அரவணைப்பு
இதனால் குழந்தைகள் லாவண்யா மற்றும் புவனேஷ் ஆகியோர் தந்தை சரவணனிடம் வளரவில்லை.தனது தாத்தா பாட்டியின் அரவணைப்பில் வளர்க்கின்றனர். சரவணன் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். தாத்தா, பாட்டி அரவணைப்பில் வளர்ந்து வந்த லாவண்யா 7-ம் வகுப்பும், புவனேஷ் 4-ம் வகுப்பும் அரசு பள்ளியில் படித்து வந்தனர்.

மாட்டு வண்டி
கடந்த ஞாயிற்றுக்கிழமை விச்சாதாங்கலில் உள்ள அங்காளம்மன் கோவிலில் கடைசி நாள் விழா நடந்தது. அன்று இரவு சாமி ஊர்வலமும் நடந்தது. சாமி மாட்டு வண்டியில் அலங்கரிக்கப்பட்டு வண்ண, வண்ண மின்விளக்குகள் பொருத்தப்பட்டது. ஒளி அமைப்புக்காக மினி ஜெனரேட்டர் வைக்கப்பட்டு சாமி புறப்பட்டது.

சிறுமி பலி
லாவண்யா மாட்டுவண்டியில் அமர்ந்து இருந்தார். திடீரென மாட்டுவண்டியில் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரில் லாவண்யாவின் தலைமுடி சிக்கி வேகமாக சுற்றியது. சிறுமி கதறி துடித்தாள். கதறல் சத்தத்தை கேட்டு ஓடிவந்த அனைவரும் உடனடியாக ஜெனரேட்டரின் இயக்கத்தை நிறுத்தினர்.

பெரும் சோகம்
சிறுமி லாவண்யாவை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி லாவண்யா உயிரிழந்தார். இதுகுறித்து மாகரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications