சாலையில் ஊர்ந்து வந்த இரும்பு குதிரை.. விஜய் கெத்தாக வந்த ஃபோர்ஸ் அர்பேனியா! இத்தனை வசதிகள் இருக்கா?
காஞ்சிபுரம்: தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்த பிறகு முதல் முறையாக கள அரசியலுக்கு வந்திருக்கிறார் நடிகர் விஜய். பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்தித்து பேசி இருக்கிறார். அதே நேரத்தில் இதுவரை கார் உள்ளிட்ட வாகனங்களில் மட்டுமே பயணித்த விஜய் அரசியல்வாதியாக தனது போர்ஸ் அர்பேனியா பிரச்சார வேனை முதல் முறையாக பொதுவெளிக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார். அது எந்த வகையான வாகனம் அதன் சிறப்பம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படவுள்ளதாக மத்திய மாநில அரசுகள் தெரிவித்துள்ளது. மேலும் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்க பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 12 கிராமங்களை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளது.

குறிப்பாக பரந்தூர், ஏகனாபுரம் ,அக்கமாபுரம், மேலேரி, வளத்தூர், தண்டலம் , நாகப்பட்டு, நெல்வாய், மகா தேவி மங்கலம், உள்ளிட்ட 12 கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளையும் நீர்நிலை பகுதிகளையும் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்காக நிலங்களை கையக்கப்படுத்தும் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், 910 நாட்களுக்கு மேலாக விமான நிலையத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடிவரும் மக்களை சந்திக்கிறார் என அறிவிக்கப்பட்டதோடு அதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் செய்து வந்த நிலையில், இன்று பல்வேறு கட்டுப்பாடுகளுக்கிடையே விஜய் மக்களை சந்தித்துள்ளார்.
தொடர்ந்து கேரவனில் வந்த அவருக்கு பூங்கொத்து கொடுத்து, பச்சைத் துண்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் துண்டை கொடுத்து வரவேற்பளித்தனர். தொடர்ந்து அந்த வாகனத்தில் நின்றபடியே அப்பகுதி மக்கள், தொண்டர்களிடையே பேசினார் விஜய். இந்த நிலையில், விஜய் வழக்கமாக கார்களில் கதவை திறந்தபடி மக்களை சந்திப்பார். அல்லது ஏதாவது வேன்களின் மீது நின்று ரசிகர்கள், மக்களை சந்திப்பார்.
இந்நிலையில், விஜய் அரசியல்வாதியாக தனது பிரச்சார வேனை முதல் முறையாக பொதுவெளிக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார். அது எந்த வகையான வாகனம் அதன் சிறப்பம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். நடிகர் விஜய் பயன்படுத்தி இருப்பது ஃபோர்ஸ் நிறுவனத்தின் அர்பேனியா வேன் ஆகும். ஃபேமிலி கான்செப்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஃபோர்ஸ் இந்தியா நிறுவனம் இதனை அறிமுகப்படுத்தியது.
8 வண்ணங்களில் இரண்டு வேரியண்ட்டுகளில் இந்த வேன் கிடைக்கும் தற்போதைய விஜய் பயன்படுத்தி இருக்கும் வேன் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டின் போது வாங்கப்பட்டதாகும். அப்போது சில மாற்றங்களுடன் அந்த பிரச்சார வாகனம் தயார் செய்யப்பட்டிருந்தாலும், அதில் விஜய் பயணிக்கவில்லை இந்த நிலையில் தான் முதன் முறையாக தனது அரசியல் பயணத்தில் பலர் அரசியலுக்கு வந்ததை குறிக்கும் வகையில் தனது முதல் பிரச்சார வேனையும் சத்தமின்றி அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
30 முதல் 35 லட்சம் விலை கொண்ட இந்த வேன் அதிகபட்சம் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். குறுகிய நடுத்தர மற்றும் நீளம் என மூன்று வேரியண்ட்டுகளில் இது கிடைக்கும். 10 பேர் முதல் 17 பேர் வரை பயன்படுத்தலாம். ஆனால் விஜய் பிரச்சாரத்திற்கு செல்லும் போது ஓய்வெடுப்பதற்காக சிறிய பெட் மற்றும் சொகுசு நாற்காலி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட 113 php திறன் இன்ஜின் மூலம் இது இயக்கப்படுகிறது. ஃபோர்ஸ் அர்பேனியா நான்கு சக்கரங்களிலும் ஏபிஎஸ், ஈஎஸ்பி, ஈடிடிசி, டிஸ்க் பிரேக்குகளுடன் வருகிறது. சிறப்பான சஸ்பென்சன், டூயல் ஏர்பேக் உள்ளிட்டவையும் இதில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கஜானாவுக்கு வரும் 1200 கோடி.. பார்ட்டி ஃபண்டில் கைவைத்த விஜய்! இனி டாஸ்மாக் கல்லா கட்டுமே! சூப்பர்! -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
“மின்வெட்டு ஏற்படுவது உண்மைதான்.. மறைக்கவோ, மறுக்கவோ இல்லை”.. ஒப்புக்கொண்ட மின்வாரிய தலைவர் -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
செந்தில் பாலாஜி மீண்டும் கைதா? ஆளுநரிடம் ‘கிரீன் சிக்னல்’ கேட்டு ஃபைல்களை அனுப்பிய தமிழக அரசு! -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு!












Click it and Unblock the Notifications