ஆ.. மண்டை மேல இருக்கிற கொண்டையை மறந்து.. இதுல மெடிக்கல் செக்கப் வேற.. திருதிருன்னு விழித்த இளம்பெண்
4 பேர் கூட்டு பலாத்காரம் செய்துவிட்டதாக பெண் அளித்த புகார் பொய் என்று வெட்டவெளிச்சமாகி உள்ளது
காஞ்சிபுரம்: தன்னை கூட்டு பலாத்காரம் செய்துவிட்டதாக போலீசில் புகார் கொடுத்திருந்த இளம்பெண்ணுக்கு, தான் கொடுத்த அந்த புகாரே எதிராக அமைந்துவிட்டது.. அப்படித்தான் ஒரு சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த மாம்பாக்கம் பகுதியில், நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 2 மணி அளவில், ஒரு வீட்டின் கதவை இளம்பெண் தட்டியுள்ளார்.. அந்த பெண்ணுக்கு 21 வயது..
செங்கல்பட்டு ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்த தன்னை, 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று காரில் கடத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அவர்களிடமிருந்து போராடி தப்பி வந்ததாகவும், போலீஸ் ஸ்டேஷனில் தன்னை ஒப்படைக்கும்படியும் அந்த பெண் கதறி அழுதுள்ளார்.

அம்பலம்
இதைப்பார்த்து பதறிப்போன அந்த பகுதி மக்களும், சாலவாக்கம் ஸ்டேஷனுக்கு தகவல் தந்தனர்.. போலீசாரும் என்ன நடந்தது என்று பெண்ணிடம் விசாரித்தனர்.. அதற்கு அவர், "சக தோழியை சந்திப்பதற்காக, சைதாப்பேட்டையில் இருந்து செங்கல்பட்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து காத்திருந்தேன். அப்போது, வெளியே நின்றிருந்த 4 இளைஞர்கள் என்னிடம் பேச்சு கொடுத்து காரில் ஏற்றி கடத்தினர். பிறகு, சாலவாக்கம் காவல் எல்லைக்கு உட்பட்ட வனப்பகுதிக்கு கொண்டு சென்று கூட்டு பலாத்காரம் செய்தனர் என்றார்.. பிறகு இதையே புகாராகவும் எழுதி தந்தார்.

மெடிக்கல் டெஸ்ட்
இதைக்கேட்டு, அதிர்ச்சியடைந்த போலீசார் இளம்பெண்ணை செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக உட்படுத்தினர். 4 பேர் கொண்ட காரில் தன்னை கடத்தி சென்றதாக சொன்னதால், இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் மற்றும் சாலவாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பெண்ணை கடத்தியவர்கள் யார் என்பதை அறிய, செங்கல்பட்டு நகர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.. அப்போதுதான் சலீமுடன் இந்த பெண், அதே ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்த காட்சியை பார்த்து அதிர்ந்தனர்.. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பெண்ணிடமே துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர்..

பழிக்குப் பழி
அப்போதுதான் மொத்த உண்மையும் வெளிச்சத்துக்கு வந்தது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்த கைகளத்தூர் பகுதியை சேர்ந்தவர் இந்த பெண் என்பதும், சென்னை சைதாப்பேட்டையில் தங்கி டெலிகாலராக(Call Centre) ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.. இவர் 2 மாத காலமாக சலீம் என்பவரை காதலித்து வந்துள்ளார். உத்திரமேரூர் அடுத்த மலையம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் இந்த சலீம்.. ஒருமுறை கல்யாண பேச்சை இந்த பெண் எடுக்கவும், திருமணம் செய்ய முடியாது என்று சலீம் மறுத்து வந்திருக்கிறார். எனினும், 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்திப்பதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளனர்..

சலீம் சலீம்
அப்படித்தான் சம்பவத்தன்று இரவும், செங்கல்பட்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த காதலியை, சாலவாக்கம் அருகே மாம்பாக்கம் பகுதிக்கு சலீம் அழைத்து சென்றுள்ளார். அங்கு மறுபடியும் திருமண பேச்சை எடுத்துள்ளார் காதலி.. இதில் இருவருக்கும் இடையே மறுபடியும் தகராறு அங்கேயே ஏற்பட்டுள்ளது.. இதனால், கோபத்தில் காதலியை சரமாரியாக அடித்துள்ளார் சலீம்.. பிறகு, அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார்.. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், சலீமை சிக்க வைக்க முடிவெடுத்தார்.. அதனால்தான், அருகில் இருந்த வீடுகளுக்கு சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் என்று ஒப்பாரி வைத்து நாடகமாடினாராம்..

பச்சை பொய்
விசாரணையின்போது, முதலில், அந்த பெண் காதலனை மட்டுமே சந்தித்து சென்றதாக சென்றுள்ளார்.. பிறகு, கூட்டு பாலியல் வன்கொடுமை எதுவுமே நடக்கவில்லை என்றும் சொல்லி உள்ளார்.. இதுதான் போலீசாருக்கு சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.. அத்துடன் கூட்டு பலாத்காரம் இல்லை என்பதும் மெடிட்டிக்கல் ரிப்போர்ட்டில் தெரியவந்துள்ளது.. இந்த வழக்கு தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி, செய்தியாளர்களிடம் பேசியபோது, "சாலவாக்கம் அருகே 4 பேர் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கில் புகார் அளித்த பெண், பொய் புகார் தந்தள்ளார்.. காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இவ்வாறு தன்னை 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார்..

மெடிக்கல் செக்கப்
சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டதில் அவ்வாறு எந்தவிதமான சம்பவமும் நடைபெறவில்லை என்பது தெரிய வந்துள்ளது.. அவர் பொய் புகார் கொடுத்ததும், அவர் போலீசாரிடமே நாடகமாடியதும் தீவிர விசாரணையில் அம்பலமாகி உள்ளது என்றார். சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்வார்கள் என்பதுகூட அறியாமல், சாலவாக்கம் ரூட்டில் தன்னை காரில் கடத்தி சென்றதை இளம்பெண் புகாரில் சொல்லி, வசமாக சிக்கி கொண்டுள்ளார்.. காதலனிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், காதலனை பழிவாங்கவும், போலீசாரிடம் சிக்க வைக்கவும், இளம்பெண் நாடகமாடி அம்பலப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications