கோர்ட் கதவை விடாமல் தட்டும் டிடிஎப் வாசன்.. ஜாமின் கிடையாது.. வெளிநாட்டு பொருட்களை விசாரிக்க உத்தரவு
காஞ்சிபுரம்: சாலையில் பைக் வீலிங் செய்து விபத்தில் சிக்கிய யூடியூபர் டிடிஎப் வாசன் தாக்கல் செய்த ஜாமின் மனுவை காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். ஜாமினுக்காக நீதிமன்றத்தின் கதவை விடாமல் தட்டும் டிடிஎப் வாசனுக்கு ஜாமின் கிடையவே கிடையாது என நீதிபதி மறுத்து விட்டார். அவர் பயன்படுத்தி வரும் வெளிநாட்டு பொருட்கள் பற்றியும் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் டிடிஎப் வாசன். இவர் விலையுயர்ந்த பைக்குகளில் டிராவல் செய்தும், சாகசம் செய்தும் யூடியூப்பில் பதிவேற்றி வருகிறார். இவரை ஏராளமான இளைஞர்கள் பாலோ செய்கிறார்கள். அதோடு சிறுவர்களும் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.

டிடிஎப் வாசன் தொடர்ந்து சாகச வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இதுதொடர்பாக தமிழ்நாட்டில் பல போலீஸ் நிலையங்களில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு அபராதங்களும் விதிக்கப்பட்டுள்ளது. எத்தனை முறை போலீசில் சிக்கினாலும் ஜாமினில் வெளிவந்து மறுபடியும் சாகச பயணங்கள் செய்து இணையதளத்தில் பதிவிடுகிறார்.
டிடிஎப் வாசன் தற்போது 'மஞ்சள் வீரன்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த நிலையில்தான் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் ‛வீலிங்' செய்து விபத்தில் சிக்கினார் டிடிஎப் வாசன். நண்பர்கள் வீட்டில் பதுங்கியிருந்த டிடிஎப் வாசனை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரம் போலீசார் டிடிஎப் வாசன் மீது வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுதல், பிறர் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தல் உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். ஜாமினில் வெளிவர முடியாத பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதோடு அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டது.
இதனையடுத்து காஞ்சிபுரத்தில் உள்ள நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஜாமின் கோரிய வழக்கறிஞர், டிடிஎப் வாசன் சிக்கிய விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை. யாருக்கு எந்த சேதமும் இல்லை. அவரே வாகனத்தை ஓட்டி சென்று விழுந்து இருக்கிறார். இத்தகைய சூழலில் அவர் மீது வலிமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யக்கூடாது. ஆனால் போலீசார் அதனை செய்துள்ளனர். இதனால் அவருக்கு ஜாமீன் வழங்கி விடுவிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. ஆனால் இதனை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதி ‛‛தொடர்ந்து அவர் அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுகிறார். பலமுறை வார்னிங் விடுக்கப்பட்டுள்ளது. தற்போதும் ஆபத்தான முறையில் பைக் ஓட்டியுள்ளார்'' எனக்கூறி ஜாமின் தர மறுத்து விட்டார். விபத்தில் சிக்கிய டிடிஎப் வாசனை அக்டோபர் 3ம் தேதி வரை சிறையில் அடைக்க காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1 ஒன்றில் , டிடிஎஃப் வாசன் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ஜாமீன் மனுவை நீதிபதி இனியா கருணாகரன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஜாமின் கேட்டு விடாமல் நீதிமன்ற கதவை தட்டி வருகிறார் டிடிஎப் வாசன்.
காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை டி.டி.எப் வாசன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நீதிபதி செம்மல், முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. டிடிஎப் வாசன் தரப்பு வழக்கறிஞர் வெங்கட்ராமன் ஆஜராகி, தனது கட்சிக்காரருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அரசு தரப்பு வழக்கரறிஞராக ஆஜராகிய கார்த்திகேயன், டிடிஎப் வாசனுக்கு ஜாமின் தர எதிர்ப்பு தெரிவித்தார். வாசனுக்கு ஜாமின் வழங்கினால் தவறான முன் உதாரணமாக அமையும். யார் வேண்டுமென்றாலும் வாகனத்தை, எப்படி வேண்டுமானாலும், இயக்கிவிட்டு ஜாமினில் வெளி வந்துவிடலாம் என கமெண்ட் செய்வார்கள் என்று வாதிட்டார்.
இருத்தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, விபத்துக்குள்ளான வாகனம் குறித்து கேட்டறிந்தார். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனமா அல்லது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வாகனமா என கேட்டார். இதனை அடுத்து போக்குவரத்து புலனாய்வு செய்யப்பட்டுள்ளதாக கேள்வியை எழுப்பிய அவர், உடனடியாக போக்குவரத்து புலனாய்வு பணியை முடிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார். டிடிஎப் வாசனுக்கு ஜாமின் வழங்க முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். டிடிஎப் வாசன் பயன்படுத்திய வெளிநாட்டு பொருட்கள் அனுமதி இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை செய்யுமாறு உத்தரவிட்டார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications