“அவனை கேட்டீங்களா?” பிரதமரை ஒருமையில் பேசிய திமுக எம்.எல்.ஏ.. முதல்வர் ஆக்ஷன் எடுக்க பாஜக கோரிக்கை!
காஞ்சிபுரம்: பிரதமர் குறித்து அநாகரீகமாக பேசியுள்ளார் திமுக எம்.எல்.ஏ எழிலரசன், திமுக தலைவர் ஸ்டாலின், எழிலரசனின் மீது கடும் நடவடிக்கை எடுப்பது அவர் வகிக்கும் முதல்வர் பதவிக்கு அழகு என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்ட காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட கீழ்கதிர்பூர், மேல்கதிர்பூர், மேல்ஒட்டிவாக்கம் போன்ற பல்வேறு பகுதிகளில் புதிய நியாய விலை கடைகள், புதிய அங்கன்வாடி மையம், பள்ளிகளுக்கு சுகாதார நிலையம் ஆகியவற்றின் திறப்பு விழாவிற்காக வருகை தந்திருந்தார்.

அப்போது கீழ்கதிர்பூர் பகுதியில் வசித்து வரும் கிராம மக்கள், 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பெண்கள் என 50க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி, திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசனை முற்றுகையிட்டு எங்களுக்கு ஏன் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மாதம் ரூ.1000 கிடைக்கவில்லை எனக் கேள்வி எழுப்பி கூச்சலிட்டனர்.
பெண்கள் சுற்றி நின்று சத்தம் போட்டு கேட்டதால் சட்டென்று கோபம் அடைந்த திமுக எம்.எல்.ஏ சி.வி.எம்.பி எழிலரசன், பத்தாண்டுகளுக்கு முன்பு ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக கூறி ஏமற்றினார்களே.. மோடியை ஏன் போய் கேட்கவில்லை... அவரிடம் போய் கேட்க வேண்டியதுதானே என பிரதமரை ஒருமையில் குறிப்பிட்டு ஆவேசமாக கேட்டார் எழிலரசன். உடனே கூட்டத்திலிருந்து பெண்மணி ஒருவர் மோடியை வர சொல்லுங்க.. நாங்க அவரிடம் கேட்கிறோம். நீங்கள் தானே எங்களிடம் வந்திருக்கிறீர்கள் என கேட்டனர்.
திமுக எம்.எல்.ஏ எழிலரசன் பிரதமர் மோடியை ஒருமையில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு மற்றும் துணைத் தலைவர் ஜம்போடை சங்கர் தலைமையில் பாஜகவினர் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், எஸ்.பி சுதாகரை நேரில் சந்தித்து, பிரதமர் மோடியை இழிவாகப் பேசிய திமுக எம்.எல்.ஏ எழிலரசன் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனக் கூறி கோரிக்கை விடுத்தனர்.
மேலும், செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், பாரதப் பிரதமரை விமர்சிக்க தகுதியற்ற திமுக எம்எல்ஏ உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் அவரது வீடு பாஜகவின் முற்றுகையிடப்படும் எனவும் தெரிவித்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாராயணன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "பொது மக்கள் மத்தியில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசனின் தரக்குறைவான பேச்சு, திமுக அரசின் தராதரத்தை வெளிப்படுத்துகிறது. ஒரு சட்டமன்ற உறுப்பினர் பிரதமர் குறித்து அநாகரீகமாக, தரக்குறைவாக பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கட்சியின் உறுப்பினர்கள் பேசுவதற்கெல்லாம் கட்சி தலைமை பொறுப்பேற்க வேண்டிய அவசியமில்லை என்றாலும் கூட ஒரு சட்டமன்ற உறுப்பினரின் தகாத நடத்தையை கண்டிக்க வேண்டியது முதலமைச்சரின் கடமை. திமுக தலைவர் ஸ்டாலின், எழிலரசனின் மீது கடும் நடவடிக்கை எடுப்பது அவர் வகிக்கும் முதல்வர் பதவிக்கு பெருமை சேர்க்கும். இல்லையேல் திமுகவின் சிறுமையை பெருக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications