இரவில் "அது" கிட்டயே படுத்துக்கிட்ட கணவன்.. தடுமாறவிட்ட மனைவி சுமதியின் நடத்தை! கலங்கும் காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தம்பதியினர், ஒட்டுமொத்த பேருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை தந்து வருகிறார்கள்.. யார் இந்த நபர்? அவரை கைது செய்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் துரிதமான விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.
காஞ்சிபுரம் அருகே உள்ளது மாகரல் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் வேலு.. 42 வயதாகிறது.. மனைவி பெயர் சுமதி.. 39 வயதாகிறது.. இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார்.. அவருக்கும் திருமணமாகிவிட்டது.. தற்போது கணவருடன் வெளியூரில் வசித்து வருகிறார்.

வேலு - சுமதி இருவருமே மரம் வெட்டும் கூலிவேலையை செய்து வருகிறார்கள். ஸ்ரீபெரும்புதூர் அருகே வளர்புரம் பகுதியை சேர்ந்த சந்துரு என்பவரிடம், கான்ட்ராக்ட் அடிப்படையில் இவர்கள் இந்த கூலிவேலையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சுமதி தம்பதி: இந்த தம்பதி இல்லாமல், 5க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சந்துருவிடம் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் எல்லாருமே, தண்டலம், ராஜலட்சுமி நகர் பகுதியில் தனித்தனியே தங்க வைக்கப்பட்டுள்ளனர். வேலு, சுமதி தம்பதியினரும் தனியாக தங்கவைத்து, வேலைக்கு பயன்படுத்தி வந்தார் சந்துரு.
இந்நிலையில், சுமதியின் நடத்தையில் திடீர் மாற்றம் ஏற்பட துவங்கியதாம். இதனால், சுமதி மீது வேலுவுக்கு நாளுக்கு நாள் சந்தேகமும் வலுத்தது... எப்போதுமே இந்த தம்பதி, கூலி வேலை முடிந்த பிறகு, ஒன்றாக உட்கார்ந்து தண்ணி அடிப்பார்களாம். நேற்று முன்தினம் ஞாயிறு விடுமுறை என்பதால் வேலுவும், சுமதியும் காலையிலிருந்தே தண்ணி அடிக்க ஆரம்பித்துள்ளனர்.. பகல் முழுவதும் மது அருந்தி, இரவு வரையிலும் அவ்வப்போது மது அருந்தி கொண்டே இருந்துள்ளனர்.
மனைவி நடத்தை: இதனால் இரவு நேரம் உச்சக்கட்ட போதை இருவருக்குமே ஏற்பட்டுள்ளது.. அப்போது, மனைவியின் நடத்தை குறித்து, வேலு கேட்டுள்ளார்.. இதுவே இருவருக்கும் வாய் தகராறில் கொண்டுபோய் விட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் சுமதியின் தலையில் மரம் வெட்டும் அரிவாளாலேயே ஓங்கி வெட்டியிருக்கிறார் வேலு.
இதில், ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து சுமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.. இரவு நேரம் இந்த கொலை நடந்ததால், சுமதியின் அலறல் சத்தம் யாருக்குமே கேட்கவில்லையாம்.. நேற்று திங்கட்கிழமை என்பதால், காலையிலேயே வேலைக்கு செல்வதற்காக மற்ற குடும்பத்தினர் சுமதியை அழைக்க வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போதுதான், சுமதி தலையில் பலத்த வெட்டுக் காயங்களுடன் வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அலறி கத்தினார்கள்..
அதிர்ச்சி: ஆனால், ஊழியர்கள் வீட்டுக்கு வந்து அலறி கூச்சலிட்டும்கூட, பிணத்துக்கு பக்கத்திலேயே போதை தெளியாமல் வேலு தூங்கிக்கொண்டிருந்தாராம்.. இதைப்பார்த்தி அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தந்தார்கள்.. போலீசாரும் விரைந்து வந்து சுமதியின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நீண்ட நேரம் கழித்து வேலுவுக்கு போதை தெளிந்துள்ளது. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மனைவியின் நடத்தை மீது ஏற்பட்ட சந்தேகத்தினால், மதுபோதையில் சண்டையிட்டதாகவும், மரம் வெட்டும் அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டதாக வாக்குமூலம் தந்துள்ளார்..
விசாரணை: இதனையடுத்து, வேலுவை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். இனிமேல்தான் விசாரணை ஆரம்பமாகும் என தெரிகிறது. இந்த "மதுபோதை" என்னும் அரக்கன், தமிழ்நாட்டில் இன்னும் எத்தனை குடும்பத்தை காவு வாங்க போகிறதோ???
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications