Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்ரீபெரும்புதூரில் என்கவுன்டர்.. போலீசாரை தாக்கிவிட்டு ஓட முயற்சி.. பிரபல ரவுடி விஷ்வா சுட்டுக்கொலை

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுர் அருகே நடைபெற்ற என்கவுன்டரில் பிரபல ரவுடி விஷ்வா சுட்டுக்கொல்லப்பட்டார். போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற போது போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி விஷ்வாவை போலீசார் என்கவுன்டர் செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பதூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் விஷ்வா. ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. சில குற்ற வழக்குகளுக்காக ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார்.

Encounter in Sriperumbudur, rowdy vishwa shot dead during police firing

இந்த நிலையில், தற்போது அவர் கையெழுத்திடாமல் தலைமைறைவாக இருந்ததால் போலீசார் பிடிவாரண்டுடன் விஷாவை தேடி வந்தனர். இந்த நிலையில், தான் விஷ்வா, சுங்குசார் சத்திரம் அருகே பதுங்கியிருப்பதை அறிந்தனர். இதையடுத்து போலீசார் அவரை பிடித்து ஸ்ரீபெரும்புதூர் அழைத்து வந்துள்ளனர்.

அப்போது சோகண்டி அருகே வந்த போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளார். இதனால் தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். இந்த என்கவுன்டரில் ரவுடி விஷ்வா சுட்டுக்கொல்லப்பட்டார். ரவுடி விஷ்வாவின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் கடந்த சில மாதங்களில் நாட்டு வெடி குண்டுகள் வீசி ஆறுக்கும் மேற்பட்ட கொலைகள் அங்கு நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் விஷ்வா விடம் போலீசார் விசரணை நடத்தினர். விஷ்வா மீது 6 கொலை வழக்குகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, விஷ்வாவிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் சென்றுள்ளனர்.

அப்போதுதான் போலீசாரை தாக்கிவிட்டு விஷ்வா தப்ப முயன்றதாகவும் இதற்காக போலீசார் என்கவுன்டர் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த என்கவுன்டர் சம்பவம் தொடர்பாக காவல்துறை வடக்கு மண்டல ஐஜி கண்ணன் மற்றும் டிஐஜி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். ரவுடி விஷ்வா நடத்திய தாக்குதலில் உதவி ஆய்வாளர் முரளி காயம் அடைந்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக பிரமுகர் நாகராஜ் என்பவர் மற்றும் பாஜகவை சேர்ந்த சங்கர் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்குகளில் விஷ்வா சம்பந்தப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். போலீசார் தனிப்படை அமைத்து ரவுடி விஷ்வாவை தேடி வந்த நிலையில், தான் தற்போது என்கவுன்டர் சம்பவம் நடைபெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+