உதயநிதிக்கு எகிறிய மவுசு.. காஞ்சிபுரத்தின் முதல் பெண் மேயரானார் மகாலட்சுமி.. இளைஞர் அணி பெருமிதம்
காஞ்சிபுரம் முதல் பெண் மேயராக மகாலட்சுமி யுவராஜ் தேர்வானார்
காஞ்சிபுரம்: புதியதாக தரம் உயர்த்தப்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் பெண் மேயர் யாராக இருக்கும் என்ற ஆர்வம் எழுந்தபடியே இருந்த நிலையில், திமுகவை சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் வெற்றி பெற்று வரலாற்று சிறப்புமிக்க இடத்தை பிடித்துள்ளார்.
Recommended Video
காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் இருக்கின்றன.. இதில் 36-வது வார்டு உறுப்பினர் ஜானகிராமன், இறந்துவிட்டதால், அந்த வார்டுக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.
மற்ற 50 வார்டுகளுக்கு மட்டும் தேர்தல் நடந்து முடிந்தது.. இதில், திமுக கூட்டணி கட்சிகள் 32 வார்டுகளில் வெற்றிபெற்று காஞ்சிபுரம் மாநகராட்சியை கைப்பற்றியது.

வேட்பாளர்
புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் மேயர் வேட்பாளராக திமுக சார்பில் 9-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மகாலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளார்... அதேபோல 22-வது வார்டில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் குமரகுருநாதன் துணை மேயர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.. இதனால் நேற்று முதலே பெரும் எதிர்பார்ப்பு இங்கு ஏற்பட்டு வந்தது.

திமுக வேட்பாளர் தோல்வி
இன்றைய தினம் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் 50 மாமன்ற உறுப்பினர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.. இதில் அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவை சேர்ந்த சூர்யா சோபன்குமாரை விட கூடுதலாக வாக்குகள் பெற்று மகாலட்சுமி யுவராஜ் வெற்றி பெற்றுள்ளார்.. அதையடுத்து அவருக்கு வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழை காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான நாராயணன் வழங்கினார்.

மகாலட்சுமி
மேலும் காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் பெண் மேயருக்கு 5கிலோ வெள்ளியிலான செங்கோல் மற்றும் கவுன் வழங்கப்பட்டு மேயர் இருக்கையில் மகாலட்சுமி யுவராஜ் முதன் முதலாக அமர்ந்தார்.. காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக மகாலட்சுமி யுவராஜ் வெற்றி பெற்று வரலாற்று சிறப்புமிக்க இடத்தினை பிடித்துள்ளார். திமுக தலைமை கழகம் அறிவித்த வேட்பாளர் மகாலட்சுமி யுவராஜ்வை எதிர்த்து திமுகவை சேர்ந்த சூர்யா சோபன்குமார் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

முதல் பெண் மேயர்
மேயர் வேட்பாளரான 36 வயதான மகாலட்சுமி, முதுகலைப் பட்டம் பெற்றவர்... தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்... அந்த பணியிலிருந்து விலகி காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்... இவரது கணவர் யுவராஜ், காஞ்சிபுரம் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார்... இப்போது புதியதாக தரம் உயர்த்தப்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக திமுகவின் மகாலட்சுமி யுவராஜ் வரலாற்று சிறப்புமிக்க இடத்தை பிடித்துள்ளார்.

குழப்பங்கள்
முன்னதாக இந்த வேட்பாளர் தேர்வில் சில குழப்பங்கள் ஏற்பட்டன.. பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து பிரிந்து திமுக கட்சிக்கு வந்த சோபன் குமார் என்பவர் திமுகவில் இளைஞர் அணி துணை அமைப்பாளர் பதவி வகித்து வருகிறார்... உதயநிதி ஸ்டாலினின் தீவிர ஆதரவாளரான இவர், இவரது மனைவி சூர்யாவை 8 ஆவது வார்டில் பெற்று வெற்றி பெற்றார். ஆனால், தலைமை கழகம் 9வது வார்டில் போட்டியிட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் யுவராஜ் மனைவி மகாலட்சுமிக்கு மேயர் பதவி ஒதுக்கி திமுக வேட்பாளராக அறிவித்தது.

திமுக பூசல்
இதற்கு சோபன் குமார் மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், மனைவி சூர்யாவையும் மேயர் பதவிக்கு நிற்க வைத்தார். பல்வேறு தரப்பில் ஆதரவு கேட்டு வந்தார்.. ஆனால், இறுதியி, திமுக தலைமை அறிவித்த மகாலட்சுமி யுவராஜ் 29 வாக்குகளையும், அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவை சேர்ந்த கவுன்சிலர் சூர்யா, 20 வாக்குகளையும் பெற்றனர்.. ஒரு வாக்கு செல்லாத வாக்காக பதிவாகிய நிலையில், மகாலட்சுமியே மேயராக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. இதையடுத்து, காஞ்சிபுரம் திமுகவில் மேலும் உட்கட்சி பூசல் அதிகமாகும் என்றே தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications