இந்தியாவின் 2வது டேட்டா சென்டர்! 1,100 பேருக்கு வேலை ரெடி: தமிழ்நாட்டுக்கு குட் நியூஸ்
காஞ்சிபுரம்: முன்பே தகவல் தொழில்நுட்பத் துறையில் பல முன்னேற்றங்களை தமிழ்நாடு அடைந்துள்ள நிலையில், இப்போது ஸ்ரீபெரும்புதூரில் இந்தியாவின் 2வது மிகப்பெரிய டேட்டா சென்டர் அமைக்கும் பணிகள் கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயை எட்டியுள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அளவில் உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகளை அதிகம் கொண்ட முன்னணி மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது. மேலும் பல பன்னாட்டு முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதற்காக துபாய், ஜப்பான், அமெரிக்கா எனப் பல நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பயணங்களை மேற்கொண்டு தொழில் முதலீடுகளை தமிழகம் நோக்கி ஈர்த்து வருகிறார். அதன் அடுத்த கட்ட முன்னேற்றமாகக் காஞ்சிபுரம் மாவட்டம் வேற லெவல் நோக்கி தன் பயணத்தை உறுதி செய்திருக்கிறது.

ஸ்ரீபெரும்புதூரில் எல்&டி நிறுவனம் ரூ. 2,000 கோடி டேட்டா சென்டர் ஒன்று விரைவில் செயல்பட இருக்கிறது. நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர், இதைப் பற்றி தெரிவிக்கையில் இந்த டேட்டா சென்டரின் சோதனைக் கட்டம் தற்போது நிறைவடையும் தருவாயில் இருக்கிறது என்று பிசினஸ்லைன் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். இந்நிறுவனம் விரைவில் அதானி, ஏர்டெல், எஸ்டிடி குளோபல் ஆகிய பிற நிறுவனங்களோடு இணைந்து இங்கே தங்கள் தரவு மையங்களை அமைக்க இருக்கிறது.
முதலீட்டாளரின் தொடர்பு பிரிவின் தலைவர் பி.ராமகிருஷ்ணன், இரண்டாம் நிதியாண்டு முடிவடைவதற்குள் சென்னையில் 12 எம்டபுள்யூ டேட்டா சென்டர் அதன் சோதனைக் கட்டத்தை முடித்துவிடும் என்றும் என கூறியிருந்தார். அவர் இப்போது, "சென்னையில் உள்ள தரவு மையத்தை விரைவில் 30 மெகாவாட் ஆக உயர்த்துவதற்காக நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்று விளக்கம் அளித்திருக்கிறார். கடந்த நவம்பர் 2021 ஆம் ஆண்டு, காஞ்சிபுரத்தில் தரவு மையத்தை நிறுவ வேண்டிய எல்&டி, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
அதன்படி, எல்&டி அடுத்த ஐந்து ஆண்டுகளில் காஞ்சிபுரத்தில் 90 மெகாவாட் திறன் டேட்டா சென்டர் மற்றும் அதனுடன் தொடர்புடைய மையங்களை நிறுவி வருகிறது. இதன்மூலம் சுமார் 1,100 பேருக்கு (நேரடியாக 600 பேர் மற்றும் மறைமுகமாக 500 பேர்) வேலைவாய்ப்பு பெற உள்ளனர்.
இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான எல்&டியின் இந்த மையம் பல விதங்களில் தமிழ்நாட்டின் தரத்தை உயர்த்த இருக்கிறது. டேட்டா சென்டர் மல்டி கிளவுட் இணையப் பாதுகாப்பு சேவைகள், டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் ஒருங்கிணைப்பு சேவைகள் மற்றும் பயன்பாட்டு ஒருங்கிணைப்பு சேவைகளை வழங்க ஹைப்பர்ஸ்கேல் டேட்டா சென்டரை நிறுவி வருகிறது. இது தொழிநுட்ப துறையில் தமிழகத்தை அடுத்த எல்லை நோக்கி இழுத்துக் கொண்டு செல்ல உதவும்.
இதன் எதிர்கால திட்டங்கள் பற்றி ராமகிருஷ்ணன், "சென்னையைத் தவிர, மஹாபே, நவி மும்பை, பெங்களூரில் உள்ள வைட்ஃபீல்ட் ஆகிய நகரங்களில் டேட்டா சென்டர்ஸ் இரண்டாம் நிதிநிலை ஆண்டுக்குள் அமைக்கப்படும் எதிர்பார்க்கிறது. அதற்காகப் பல வாய்ப்புகளை மதிப்பீடு செய்து வருகிறோம்" என்று கூறியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் பன்வெல்லில் உள்ள 2 மெகாவாட் டேட்டா சென்டர் ஒருங்கிணைந்த சோதனையில் உள்ளது. அது நடப்பு காலாண்டில் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில்தான் டேட்டா சென்டர்களுக்கான முக்கிய மையமாக சென்னை தனது முத்திரையைப் பதித்துள்ளது. இந்தியாவின் இரண்டாவது பெரிய டேட்டா சென்டர் மையமாக இது ஸ்ரீபெரும்புதூரில் உருவாகி வருகிறது. இந்தியா, தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா, CBRE இன் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அன்ஷுமான் அளித்துள்ள பேட்டியில் சென்னை முக்கியமான டேட்டா சென்டராக உருவெடுக்கப் பல காரணங்கள் உள்ளன என்று கூறியுள்ளார். ஒரு வலுவான தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு, திறமையான பணியாளர்கள், அரசு ஆதரவு, சுற்றுச்சூழல் ஆகியவை அதில் அடங்குகின்றன.
மேலும் சென்னை பல வகைகளில் மையப் பகுதியாக மாறியுள்ளது. சர்வதேச ஃபைபர் ஆப்டிக் கேபிள்களுக்கான இணைப்பு ஆகியவை டேட்டா சென்டர் எளிதாக செயல்பாட்டுக்கான வலுவான நெட்வொர்க்கை வழங்கி உள்ளது. இத்துடன் அரசின் வரிச் சலுகைகள், உள்கட்டமைப்பு மேம்படுத்தத் தமிழக அரசு எடுத்துள்ள முன்முயற்சிகள் ஆகியவை இந்த டேட்டா சென்டர் இங்கே வருவதற்கு உந்து சக்திகளாக இருந்துள்ளன.
-
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications