காஞ்சிபுரத்தில் ஒரே கூட்டம்.. செவிலிமேடு பாலத்தில் பார்த்தீங்களா.. 3 கி.மீட்டருக்கு நிக்குதாமே

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பாலாறு மேம்பாலத்தில் தொழிற்சாலைக்கு ராட்சத இரும்பு பாகம் ஏற்றிச் சென்ற கனரக லாரி பழுதாகி நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 3 கிலோ மீட்டர் தூரம் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன... எனினும், போக்குவரத்து நெரிசல் என்பது தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. புறநகர் பகுதிகளும் இதற்கு விதிவிலக்கல்ல..

Kancheepuram and Heavy Traffic in Kanchipuram Sevilimedu Palaru Bridge for 3 hours

வாகன ஓட்டிகள்: இதனால், காலை, மாலை, இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிடுகிறது.. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக சிக்கி அவதிக்கு ஆளாகிவிடுகிறார்கள்.. அதிலும் மழை நேரம் என்றால், இன்னும் நிலைமை மோசம்..

சென்னை மெட்ரோ: இப்போது சென்னையில் சில பகுதிகளில் மெட்ரோ ரெயில் பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.. சில இடங்களில் மழை நீர் கால்வாய் பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன..

இந்நிலையில், சென்னையில் போக்குவரத்து மாற்றங்களும் ஆங்காங்கே செய்யப்பட்டுள்ளன.. திடீரென போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளதால், இன்று வாகன ஓட்டிகள் சற்று சிரமப்பட்டுவிட்டனர்.. அதனால், எளிதாக செல்ல முடியாமல் திணறிவிட்டனர்..

குறிப்பாக, கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை, அளவுக்கு அதிகமாகவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன்காரணமாக, கார்களும், பைக்குகளும், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.. அலுவலகத்துக்கு செல்பவர்கள் முதல் அனைத்து வாகன ஓட்டிகளுமே கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

காஞ்சிபுரம்: அதேபோல, காஞ்சிபுரத்திலும் தற்போது திடீரென நெரிசல் ஏற்பட்டுள்ளது.. காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பாலாறு மேம்பாலத்தில் தொழிற்சாலைக்கு ராட்சத இரும்பு பாகம் ஏற்றிச் சென்ற கனரக லாரி பழுதாகி நின்றுவிட்டதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால், 3 கிலோ மீட்டர் தூரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளார்கள். போக்குவரத்து போலீசார், நெரிசலை தவிர்த்து, நிலைமையை சீர்செய்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+