காதலனுடன் இருந்த பெண்.. சட்டென புகுந்த 5 பேர்.. காட்டுக்குள் கேட்ட "அலறல்".. கலங்கிய காஞ்சிபுரம்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஆள் அரவமற்ற பகுதியில் அமர்ந்து காதலனுடன் பேசிக்கொண்டு இருந்த கல்லூரி மாணவியை 5 பேர் கொண்ட கும்பல் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிராக குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. Yes All Men என்பதை மீண்டும் மீண்டும் சொல்லும் வகையில் எல்லா மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிராக குற்றச்செயல்கள் உச்சம் தொட்டு உள்ளன.

வயது வேறுபாடு இன்றி பெண்கள் கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் காஞ்சிபுரத்தில் நடந்த சம்பவம் ஒன்று மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பலாத்காரம்

பலாத்காரம்

காஞ்சிபுரத்தில் ஆள் அரவமற்ற பகுதியில் அமர்ந்து காதலுடன் பேசிக்கொண்டு இருந்த கல்லூரி மாணவியை 5 பேர் கொண்ட கும்பல் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அந்த பகுதியில் இருக்கும் கல்லூரி ஒன்றில் அந்த மாணவி படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில்தான் அந்த மாணவரும் படித்து வந்துள்ளார். இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். அடிக்கடி இவர்கள் வெளியே செல்வது வழக்கம். கல்லூரியில் சந்திக்க முடியாது என்பதால் இவர்கள் அடிக்கடி வெளியே சந்தித்துக்கொள்வார்கள்.

சந்திப்பு

சந்திப்பு

காஞ்சிபுரம் அருகே பெங்களூர் - புதுச்சேரி சாலையில் இருக்கும் அவுட்டர் ரிங் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றிற்கு அருகில் இருக்கும் இருட்டான பகுதியில் இவர்கள் அடிக்கடி சந்திப்பது வழக்கம். இந்த இடம் ஒதுக்குபுறமாக இருக்கும் இடம் என்பதால் இவர்கள் இங்கே அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இவர்கள் இப்படி இங்கே அடிக்கடி வருவதை கும்பல் ஒன்று நோட்டமிட்டு உள்ளது. இவர்கள் தனியாக இருப்பதையும், இரவு நீண்ட நேரம் இங்கே இருப்பதையும் கும்பல் ஒன்று நோட்டமிட்டு உள்ளது. அந்த பகுதி குடிகாரர்கள் இரவில் அமர்ந்து குடித்துவிட்டு, ரகளை செய்யும் இடமாகும்.

 வியாழக்கிழமை

வியாழக்கிழமை

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அந்த காதலர்கள், அங்கு அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அவர்கள் மிகவும் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது நேரம் 7 மணி இருக்கும். அங்கே மது குடித்துக்கொண்டு இருந்த இரண்டு பேர் அந்த காதலர்களை பார்த்து உள்ளனர். அந்த பெண்ணை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டிவிட்டு, அவரை அங்கேயே கட்டி போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இன்னும் 3 பேருக்கு போன் செய்து வர வைத்து அவர்களை வைத்தும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய வைத்துள்ளனர்.

கத்தி

கத்தி

காதலனை கத்தி முன் வைத்து இரண்டு பேர் மிரட்டிக்கொண்டு இருக்க மற்றவர்கள் மாறி மாறி அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். அந்த பெண் இணங்கவில்லை என்றால் அவர்களை கொலை செய்துவிடுவேன் என்று கூறி அந்த கும்பல் மிரட்டி உள்ளது. அதோடு அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததை அவர்கள் வீடியோவும் எடுத்து உள்ளனர். 5 பேரும் பலாத்காரம் செய்த நிலையில், அவர்கள் அசந்த நேரத்தில் அங்கிருந்து இருவரும் தப்பி ஓடி உள்ளனர். இதையடுத்து குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவித்த அந்த பெண் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

புகார்

புகார்

இதையடுத்து உடனே போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சந்தேகத்தின் பெயரில் சிலரை கைது செய்தனர். விட்னஸ் பரேட் நடத்தியதில் அந்த பெண்ணால் அவர்களை சரியாக அடையாளம் காண முடியவில்லை. அந்த பகுதி இருட்டாக இருந்ததால் சரியாக அடையாளம் காண முடியவில்லை. ஆனால் அதில் ஒருவனை அந்த கும்பல் விமல் என்று அழைத்து உள்ளது. அந்த சந்தேகப்பட்ட நபர்களில் ஒருவன் விமல் என்று இருக்க அவனை அடித்து போலீசார் விசாரித்துள்ளனர். இதில் அந்த விமல் ஒப்புக்கொண்டு மற்ற 4 பேரையும் அடையாளம் காட்டி உள்ளான். அவர்கள் எல்லோரின் வயதும் 22க்கும் கீழ் என்பது குறிப்பிடத்தக்கது. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் சிறையில் தள்ளப்பட்டு உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+