• search
காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆசைப்பட்டபடியே உயிரைவிட்ட மனைவி.. அடுத்த செகண்டே இறந்த கணவன்.. உத்திரமேரூரை உலுக்கிய ஆதர்ச தம்பதி

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: கணவனும், மனைவியும் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் மானாம்பதி கிராமத்தை உலுக்கி எடுத்துள்ளது.உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்.. 91 வயதாகிறது.. மனைவி பெயர் சுலோச்சனா.. இவருக்கு 86 வயதாகிறது.. இருவருமே ஆசிரியர்கள்.
இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் இருக்கிறார்.. 3 பேருக்குமே கல்யாணமாகிவிட்டது.. 2 மகள்களும், அவர்களது கணவர், பிள்ளைகளுடன் தனித்தனியாக வசிக்கின்றனர்...

மகனுடன் ஆறுமுகமும், சுலோச்சனாவும் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். வயது மூர்ப்பு காரணமாக கடந்த சில மாதங்களாகவே ஆறுமுகத்துக்கு உடல்நலம் பாதிப்பு இருந்து வந்தது.. அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும், மருந்து, மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டும் வந்தார்... எனினும் சில நாட்களாகவே வீட்டில் படுத்த படுக்கையாக இருந்தார். அவரை சுலோச்சனாவும், மகன், மருமகள், பேரக்குழந்தைகள் உடனிருந்து கவனித்து வந்தனர்...

5 நிமிடங்கள்.. வெலவெலத்த ஆபீசர்கள்.. தரையில் உட்கார்ந்த கலெக்டர்.. திகைத்த திருப்பத்தூர்.. என்னாச்சு5 நிமிடங்கள்.. வெலவெலத்த ஆபீசர்கள்.. தரையில் உட்கார்ந்த கலெக்டர்.. திகைத்த திருப்பத்தூர்.. என்னாச்சு

 தைரியம் சொன்ன கணவர்

தைரியம் சொன்ன கணவர்

ஆனால், சுலோச்சனா மட்டும் கணவன் அருகில் உட்கார்ந்து, "உங்களுக்கு முன்னாடியே, நான் இறந்துடணும்.. உங்கள் உயிர் பிரிவதற்கு முன்பே, இந்த தேகம் இறைவனிடம் சென்றடைய வேண்டும்" என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பாராம். அதற்கு ஆறுமுகமும், ஏன் இப்படியெல்லாம் பேசுகிறாய்? உனக்கு ஒன்றும் ஆகாது என்று தைரியமும், ஆறுதலும் சொல்லியபடியே அவரை தேற்றி வந்துள்ளார்..இந்நிலையில் நேற்று காலையில் தூங்கி எழுந்த சுலோச்சனா, வழக்கம்போல், வீட்டில் வேலையை செய்து கொண்டிருந்தார்... அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்..

 சுலோச்சனா

சுலோச்சனா

இதை பார்த்ததும் வீட்டிலிருந்தோர் அதிர்ச்சியடைந்தனர்... பதறியடித்துக் கொண்டு சென்று, சுலோச்சனாவை தூக்கிவிட்டனர்... அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினர்... ஆனால், நீண்ட நேரமாக சுலோச்சனா எழவே இல்லை.. அப்போதுதான் அவர் இறந்து விட்டது தெரிந்தது... இதனால் குடும்பத்தினர் கதறி கதறி அழுதனர். இறுதியில், சுலோச்சனாவின் உடலை அடக்கம் செய்வதற்கான இறுதி சடங்குகளை, அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் செய்து கொண்டிருந்தனர்.

 பதற்றம்

பதற்றம்

இதனிடையே, சுலோச்சனா இறந்த தகவலை ஆறுமுகத்திடம் உறவினர்கள் சொல்லி உள்ளனர்.. அந்த தகவலை கேட்டதுமே அதிர்ச்சியில் உறைந்த ஆறுமுகமும் மயங்கி விழுந்துவிட்டார்.. மூச்சு, பேச்சு இல்லாமல் போனது.. இதனால் உறவினர்களுக்கு மேலும் பதற்றம் அதிகமானது... ஆனால், ஆறுமுகத்தின் உயிரும் பிரிந்திருந்தது.. மனைவியின் இறப்பை தாங்கி கொள்ள முடியாமல் ஆறுமுகத்தின் உயிர் பிரிந்த துயர சம்பவம் அந்த கிராமத்தையே நிலைகுலைய வைத்துவிட்டது..

சுடுகாடு

சுடுகாடு

பிறகு, ஆறுமுகத்தின் உடலையும் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்தனர்... தம்பதியின் உடல்களுக்கு இறுதி சடங்குகள் முடிந்ததும் ஊர்வலம் தொடங்கியது.. அன்பில் பறவைகளாய் வாழ்வில் பறந்து திரிந்து, ஒரே நாளில் உயிரிழந்த ஆதர்ச தம்பதிக்கு, பொதுமக்கள் ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்தினர்.. வாழ்விலும், மரணத்திலும் ஒன்றாக சங்கமித்த ஆறுமுகமும், சுலோச்சனும் இருவரின் உடல்களும் அருகருகே அடக்கம் செய்யப்பட்டது.

English summary
kancheepuram husband who died in shock of wifes death final tribute to the couple who lived like birds of love மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவனும் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X