பாடம் எடுத்த காஞ்சிபுரம் கலெக்டர்.. பார்த்த உடனே கோபம்.. பஞ்சாயத்து தலைவருக்கு நேரடியாக விழுந்த டோஸ்
காஞ்சிபுரம்: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் திடீரென சென்று ஆய்வு நடத்தினார். அங்கு மாணவ மாணவிகளுக்கு பாடம் நடத்திய கலெக்டர், அசுத்த தண்ணீர் தொட்டி தொடர்பாக பஞ்சாயத்து தலைவரை கண்டித்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.
மாவட்டத்தின் அனைத்து துறைகளையும் நிர்வகிக்கும் பொறுப்பு ஒருவருக்கு உள்ளது என்றால் அது அந்த மாவட்டத்தின் ஆட்சியருக்குத்தான் உள்ளது. நிதி, நீதி, நிர்வாகம், காவல், சட்டம் ஒழுங்கு, பள்ளி கல்வி, சுகாதாரம், நெடுஞ்சாலை, வனம், சுற்றுச்சூழல் என அனைத்து துறைகளிலும் எந்த பிரச்சனை என்றாலும் கலெக்டரை தான் முதல் கேள்வி கேட்பார்கள். அதற்கு பிறகு தான் துறைவாரியாக அதிகாரிகளை கேட்பார்கள்.

ஒரு மாவட்டத்திற்கே கலெக்டர் தான் தலைவர்.. அவர் எந்த துறை தொடர்பாக வேண்டுமானாலும், மாவட்டத்தில் எங்கு வேண்டுமானாலும் போய் ஆய்வு நடத்தி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியும். அவரது உத்தரவின் படி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த வகையில் தமிழக அரசு தொடங்கி உள்ள உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஏதாவது ஒரு கிராமத்தில் தங்கி அந்த கிராமத்தில் உள்ள குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும். அந்த திட்டப்படி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி, தேவரியம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் திடீரென சென்று ஆய்வு நடத்தினார்.
பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டிகள், சமையலறை, விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றின் தரம் குறித்து ஆய்வு நடத்திய கலெக்டர் கலைச்செல்வி, வகுப்பறையில் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடி பாடமும் நடத்தினார். அதன் பின்னர் பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யப்படாத நிலையில் இருப்பதை பார்த்த மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, அந்த ஊர் பஞ்சாயத்து தலைவரை கடிந்து கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications