Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காஞ்சிபுரத்தை கலங்கடித்த ஜோடி.. கவர்ச்சியோ கவர்ச்சி.. யார் யாருங்க.. அதுக்குள்ள போஸ்டர் ஒட்டிட்டாங்க

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தையே அதிர வைத்துள்ளனர் அருள் - சிவசங்கரி தம்பதியினர்.. இவர்களை தான் பொதுமக்கள் தேடி கொண்டிருக்கிறார்கள்.

காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்கள் அருள் - சிவசங்கரி தம்பதியினர்.. தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார் அருள்.. மற்றொருபுறம் பைனாஸ் கம்பெனியையும் நடத்தி வருகிறார்.. அருள் காலேஜ் சென்றுவிடுவதால், பிரதான பொறுப்பை இவரது மனைவி சிவசங்கரியிடம்தான் இருந்திருக்கிறது.

Kanchipuram Couple and Do you know why did Kancheepuram People take this sudden decision

குலுக்கல் சீட்டு: புரொபசர் என்பதால், அந்த பகுதி மக்கள் இவரிடம் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.. அதனால்தான், கடந்த 10 வருடங்களுக்கு மேலாகவே, இந்த பைனாஸ் கம்பெனியை அருள் நடத்தி வர முடிந்திருக்கிறது.. நாளடைவில், மாதாந்திர ஏலச்சீட்டு, குலுக்கல் சீட்டு போன்ற சீட்டு குரூப்களையும், இந்த தம்பதிகள் தொடங்கி நடத்தி வந்துள்ளனர். இதற்கு இந்த தம்பதி கையிலெடுத்த ஆயுதம், "கவர்ச்சி விளம்பரம்"

ஒவ்வொரு சீட்டு குரூப்களுக்கும், ஒவ்வொரு விதமான விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.. இப்படித்தான், கடந்த வருடம் புதிதாக ஒரு சீட்டு திட்டத்தை துவங்கியிருக்கிறார்கள்..

அதாவது, மாதம் ரூ.1,000 கட்டினாலே போதும், வருட கடைசியில் கட்டிய தொகைக்கு கூடுதலான மதிப்பில் தங்க நகை வழங்கப்படும் என்று விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள். இதை பார்த்ததும் ஏராளமானோர், இந்த நகை திட்டத்தில் சேர முன்வந்தனர்..

30 குழுக்கள்: அதாவது, ஒரு குழுவுக்கு 100 பேர் என மொத்தம் 30 குழுக்கள் சேர்க்கப்பட்டது.. இறுதியில் 3,000 பேரிடம் பணம் வசூலிக்கப்பட்டது. இன்னும் இதுபோல, வேறு சில சீட்டு குரூப்களையும் சேர்த்து சுமார் ரூ.10 கோடி வரை இந்த தம்பதி பணம் வசூலித்திருக்கிறார்களாம்..

ஆனாலும், சீட்டுக்கான முதிர்வு காலம் முடிந்தும்கூட, பணம் தரவில்லை.. ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு சாக்கு சொல்லி, பணம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்திருக்கிறார்கள்.

அவர்கள் அறிவித்த நேரத்தில், எந்தவித சலுகையும் தரப்படவில்லை.. தங்க நகை திட்டத்திலும்கூட, வருட கடைசியில் தருவதாக சொன்ன தங்க நகையை தரவில்லை.. பாதிக்கப்பட்டவர்கள் தம்பதியிடம் பணம் கேட்க போனால், அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

அதிர்ச்சி:
இறுதியில் என்ன செய்வதென்றே தெரியாமல், பாதிக்கப்பட்டவர்கள், சிவகாஞ்சி போலீசுக்கு சென்று புகார் தந்துள்ளார்கள்.. ஆனால், போலீஸ் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்..

ஏற்கனவே அதிர்ச்சியாகியிருந்த மக்களுக்கு, காவல்துறையின் பாராமுகம் மேலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், பாதிக்கப்பட்டவர்கள் எல்லாருமே ஒன்று சேர்ந்து, மோசடியில் ஈடுபட்ட தம்பதியின் போட்டோக்களை போட்டு போஸ்டர் அடித்து காஞ்சிபுரம் முழுக்க ஒட்டிவிட்டார்கள்.

பிறகு, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. ஆபீசுக்கு அந்த போஸ்டருடன் போனார்கள்.. தம்பதியினரின் மோசடி குறித்து, புகாராகவும், மனு அளித்தார்கள்.. அந்த மனுவின்பேரில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களுக்கு உத்தரவாதம் தரப்பட்டுள்ளது.. அதற்கு பிறகே, பாதிக்கப்பட்டவர்கள் அங்கிருந்து கிளம்பி சென்றார்கள்.. காஞ்சிபுரம் முழுக்க இந்த தம்பதியினரின் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+