’தலைநகரம்’ பாணி.. காஞ்சிபுரம் வசூல்ராஜா கொடூர கொலை.. ஒரே குண்டில் கதையை முடித்தது யார்? பரபர பின்னணி

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் திருக்காளி மேடு பகுதியில் பிரபல ரவுடியான வசூல்ராஜா, வெடி குண்டு வீசி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்ற சம்பவங்களில் ஈடுபட மாட்டேன் என போலீசாருக்கு எழுதிக் கொடுத்து ட்ராவல்ஸ் நடந்த வந்தவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணி குறித்து பார்க்கலாம்..

காஞ்சிபுரம் திரு காளி மேடு பகுதியை சேர்ந்தவர் ரவுடி வசூல்ராஜா. இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. காவல் துறையின் அறிவுரையின் பெயரில் தற்போது எந்த குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் டிராவல்ஸ் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது.

Kanchipuram crime police

இந்நிலையில் இன்று திருக்காலிமேடு சிவன் கோயில் எதிரே உள்ள ரேஷன் கடை வாசலில் வசூல்ராஜா பகல் 1 மணியளவில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பார்க்காத நேரத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் திடீரென ராஜா மீது நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளார்.

அப்போது அது மார்பு பகுதியில் பட்டத்தின் விளைவாக அப்பகுதி முழுவதும் சிதைந்து அதே இடத்தில் நிலை குலைந்து உயிரிழந்தார். வெடி சத்தம் கேட்டதும் அருகில் இருந்த குடியிருப்பு வாசிகள் வெளியே வந்து பார்க்கும்போது அவரது உடல் சிதைந்த நிலையில் இருந்ததும் உடனடியாக இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் விரைந்து வந்து புலன் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சம்பவம் இடத்திற்கு தற்போது இரண்டு ஏடிஎஸ்பி தலைமையிலான குழுவினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகள், மோப்பநாய் உதவியுடன் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரிடம் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டார். மேலும் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தப்பி ஓடிய கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைத்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். பட்டப்பகலில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது அப்பகுதியில் மிகுந்த அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

யார் இந்த வசூல் ராஜா?: திருக்காளீமேடு பகுதியைச் சேர்ந்த ராஜா மீது இருபதுக்கும் மேற்பட்ட கொலை, முயற்சி, ஆக்கடத்தல், மிரட்டி பணம் வசூலித்தல் இருவருக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. துவக்கத்தில் சிறுசிறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த அவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜோசப் மற்றும் அவர் நண்பரை கொலை செய்து பிரபலமானவர். அதனை தொடர்ந்து ஆட்டோ ராஜா என்பவரையும் கொலை செய்த நிலையில் 2011க்கு பிறகு வசூல்ராஜா பெரிய ரவுடி ஆனார். வட்டிக்கு விடும் தொழிலில் ஈடுபட்டு வந்த அவர் மேலும் சில பைனான்சியர்களுக்கு பணத்தை வசூலித்துக் கொடுக்கும் வேலையும் செய்து கொண்டிருக்கிறார். இதனாலேயே அவரை வசூல்ராஜா என அழைத்துள்ளனர்.

ஒருவரை கொலை செய்த ஸ்கெட்ச் போட்டால் அவருக்கு நெருக்கமானவர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்கி கொலை செய்ய வேண்டிய நபரை போதையில் மட்டையாக்கி விட்டு அதற்குப் பிறகு கொலை செய்வது வசூல்ராஜாவின் வழக்கமாம். தொடர்ந்து தனக்கு அச்சுறுத்தல் இருந்ததால் திருந்தி வாழ்வதாக போலீசாரிடம் எழுதிக் கொடுத்து விட்டு தன் மீதான வழக்குகளை முடிப்பதில் கவனமாக இருந்திருக்கிறார். மேலும் அச்சுறுத்தல் காரணமாக வேலூர், ஆந்திரா என தலைமறைவு வாழ்க்கையும் வாழ்ந்திருக்கிறார். இந்த நிலையில் தான் தற்போது சொந்த ஊருக்கு வந்தபோது வசூல்ராஜா கொலை செய்யப்பட்டு இருக்கிறார். வட்டித் தொழிலில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது பழைய கணக்கால் தீர்த்துக் கட்டப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+