மனைவி பிரிந்து போனதை தாங்காமல் மண்ணெண்ணெய் ஊற்றிய முருகன்.. காஞ்சிபுரத்தில் சோகம்
காஞ்சிபுரம்: 4 ஆண்டுகளுக்கு மேலாக மனைவியுடன் பிரிந்து வாழ்வதை தாங்க முடியாமல் டெய்லர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டர். இந்த சோகமான சம்பவம் காஞ்சிபுரத்தில் நடந்துள்ளது.
காஞ்சிபுரம் அருணாச்சல நகர் பகுதியில் வசிப்பவர் முருகன் . இவர் அருகில் டெய்லர் கடையை நடத்தி வந்தார். இவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னதாக உறவினர் பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவருக்கு 10 வயதில் ஆணும் 8 வயதில் பெண் குழந்தையும் உள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளாக கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி பிரிந்து பாண்டிச்சேரியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலுக்கு உண்டான முருகன் தினந்தோறும் அதிக அளவில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார் என அக்கம்பக்கத்தினர் கூறினார்.

இந்நிலையில் இன்று காலை முருகன் சமையல் அறையில் வைத்து இருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீயிட்டுக் கொண்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்து வருவதற்குள் சம்பவ இடத்திலேயே முருகன் பலியானார். இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப பிரச்சனைக்காக தீக்குளித்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications