சொக்க வைத்த தேவி.. விரட்டி விரட்டி காதலித்த ஹரி.. உள்ளே புகுந்த "பேய்".. அடித்தே கொன்ற பரிதாபம்!

கர்ப்பிணி மனைவியை அடித்தே கொன்றுவிட்டார் கணவர்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: விரட்டி விரட்டி தேவியை காதலித்ததுடன், கல்யாணம் ஆன முதல் நாளே டார்ச்சர் செய்ய ஆரம்பித்துவிட்டார் கணவர் ஹரி.. இறுதியில் அந்த கர்ப்பிணி மனைவியை கடப்பாறை கொண்டே அடித்து கொன்றுவிட்டார்.. இதற்கெல்லாம் காரணம் தேவியின் அழகும், ஹரியின் சந்தேகமும்தான். இந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை தந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் கீழம்பி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்.. 25 வயதாகிறது.. கட்டிட வேலை பார்க்கிறார்.. இவர் வீட்டு பக்கத்திலேயே வசித்து வந்தவர் தேவி.. 21 வயதாகிறது.. தேவி பிளஸ் 2 படிக்கும்போதிருந்தே அவரை ஹரி காதலித்தார்.. படித்துவிட்டு, 4 வருட நர்ஸ் கோர்ஸ் படித்துள்ளார் தேவி.

lockdown crimes: husband killed pregnant wife near kancheepuram

ஆரம்பத்தில் காதலிக்காமல் ஒதுங்கி ஒதுங்கியவரை ஹரிதான் விரட்டி மிரட்டி எதை எதையோ பேசி மனசு கரைய வைத்தார்.. வீட்டிற்கு விஷயம் தெரிந்ததும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.. இந்த சமயத்தில்தான் பெங்களூரில் டிரெயினிங் சென்றிருக்கிறார் தேவி.

ஆனால் ஹரி அங்கேயும் விரட்டி கொண்டு போய்விட்டார்.. 7 மாசத்துக்கு முன்பு பெங்களூரில் இருந்த தேவியை கட்டாயப்படுத்தி காஞ்சிபுரம் அழைத்து வந்து கல்யாணம் செய்ய வற்புறுத்தி உள்ளார். உன் குடும்பத்தை விட்டுவிட்டு வந்துவிடு, நான் இருக்கிறேன் என்று சத்தியங்களை செய்து கல்யாணத்துக்கு சம்மதிக்க வைத்தார். விவகாரம் பாலுசெட்டி போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றுவிட்டது.. அவர்கள் முன்னிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் இந்த கல்யாண்ம் நடந்தது.

ஆனால் கல்யாணம் நடந்த அன்றே குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து டார்ச்சரை ஆரம்பித்துள்ளார் ஹரி.. அடித்தும் இருக்கிறார்.. யாரிடமும் பேசக்கூடாது, வெளியே போகக்கூடாது என்று அப்போதே கண்டிஷன்களை போட்டுவிட்டார். ஒவ்வொரு நாளும் தேவிக்கு நரகமாக போனது.

தேவி 4 மாத கர்ப்பம்.. இந்நிலையில்தான் நேற்றும் சந்தேகத்தினால் சண்டை வந்துள்ளது.. நடுராத்திரி கடப்பாரையை எடுத்து திடீரென தேவியின் மண்டையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் தேவியின் மண்டை பிளந்து மூளை சிதறி விட்டது.. சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதற்குள் தேவி பிணமாக கிடந்தார். உடனடியாக பாலுசெட்டி போலீசார் விரைந்து வந்து சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர். ஹரியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்.

தேவியின் மரணம் குறித்து அவரது தங்கை சொல்லும்போது, "என் அக்கா ரொம்ப அழகு.. ரொம்ப சாஃப்ட்.. பெங்களூரில் 4வது வருஷம் நர்சிங் படிச்சிட்டு இருந்த என் அக்காவை "நீ இல்லை என்றால் செத்து விடுவேன்" என்று மிரட்டி மிரட்டியே பயமுறுத்தி இழுத்து வந்துவிட்டார்.. கடப்பாறையாலேயே அடித்து கொன்றுவிட்டார்.. இந்த கொடூரனுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும்" என்றார்.

பிள்ளையை கஷ்டப்பட்டு வளர்த்து, நர்சுக்கு படிக்க வைத்தும்... இன்று கர்ப்பிணியாய் விழுந்து கிடக்கும் சடலத்தை கண்டு நொறுங்கி உடைந்து கதறுகிறார்கள் தேவியின் பெற்றோர்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+