கஸ்தூரி வீட்டிலிருந்து துர்நாற்றம்..காத்திருந்த ஷாக்! வளையாபதியை வளைத்த போலீஸ்! மதிமுக மா.செ ஆச்சே

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரான கஸ்தூரி கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக மதிமுக மாவட்ட செயலாளரான வளையாபதியை காவல் துறையினர் கைது செய்திருக்கின்றனர். கொலை செய்து விட்டு இறுதிச்சடங்கு வரை அழுவது போல் நடித்து நாடகமாடிய வளையாபதி சிக்கியது எப்படி என்பது குறித்து போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்..

காஞ்சிபுரம் காலண்டர் தெரு பகுதியில் ஓய்வு பெற்ற பெண் காவல் ஆய்வாளரான கஸ்தூரி வசித்து வந்தார். 63 வயதான அவர் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் அவரது மகன் டேராடூனில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

kanchipuram crime police

காவல்துறையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ஆனால் 35 வயதிலேயே கணவரை பிரிந்து மகனுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. மகன் தற்போது வெளி மாநிலத்தில் வசித்து வரும் நிலையில் தனியாக இருந்திருக்கிறார் கஸ்தூரி. இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி கஸ்தூரியின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதை அடுத்து அருகில் இருந்தோர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது கஸ்தூரி உயிரிழந்து கிடந்த நிலையில், சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு கஸ்தூரியின் உடல் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

அந்த ஆய்வு முடிவில் கஸ்தூரி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து சந்தேக மரணம் என்பதை கொலை வழக்காக மாற்றிய போலீசார், கொலையாளிகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வீடு விற்பனை தொடர்பாக கஸ்தூரிக்கும் மதிமுக மாவட்ட செயலாளரான வளையாபதிக்கும் இடையே தகராறு இருந்ததால் அவரை விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர்.

இந்நிலையில் நேற்று சென்னையில் இருந்து காஞ்சிபுரம் வந்த வளையாபதி போலீசார் கருக்குப்பேட்டை அருகே நள்ளிரவில் பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் வளையாபதி கஸ்தூரியை கொலை செய்தது தெரிய வந்தது. இந்நிலையில் வீடு வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலையை வளையாபதி அரங்கேற்றிருக்கிறார். தற்போது வளையாபதி கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில், கொலைக்கு உடந்தையாக இருந்த பிரபுவை போலீசார் தேடி வருகின்றனர்.

கஸ்தூரிக்கு காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் வடக்கு மாத வீதியில் வசித்து வரும் மாவட்ட செயலாளருக்கு ஏற்கனவே பழக்கம் இருந்திருக்கிறது. வீடு நிலம் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கஸ்தூரிக்கு வளையாபதி உதவியிருக்கிறார். இந்நிலையில் தான், தான் வசிக்கும் வீட்டை விற்க கஸ்தூரி முயற்சித்தார். இதை அடுத்து அந்த வீட்டை தான் வாங்கிக் கொள்வதாக வளையாபதி கூறியிருக்கிறார்.

ஆனால் விலை தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பேசுவதை தவிர்த்து வந்துள்ளனர். இதை அடுத்து கடந்த 22ஆம் தேதி கஸ்தூரியை வளையாபதி கொலை செய்திருக்கிறார். தொடர்ந்து கஸ்தூரியின் மகன் காமேஷ் வளையாபதியை தொடர்பு கொண்டு தான் எத்தனை முறை அனைத்தும் கஸ்தூரி ஃபோனை எடுக்கவில்லை என்ன ஏது என்று பார்த்து சொல்லுங்கள் எனக் கூறியிருக்கிறார்.

இதை அடுத்து வளையாபதி கஸ்தூரி வீட்டுக்கு பார்ப்பது போல பார்த்திருக்கிறார். ஆனால் அதற்கு முன்னரே வளையாபதி தான் கஸ்தூரியை கொலை செய்திருக்கிறார். தொடர்ந்து கஸ்தூரி இறந்து கிடப்பதாக தகவலை சொன்னவுடன் காமேஷ் காஞ்சிபுரம் விரைந்திருக்கிறார் .தொடர்ந்து உடற்கூறு ஆய்வின் போதும் இறுதிச் சடங்குகளின் போதும் அழுது நடித்திருக்கிறார் வளையாபதி, கஸ்தூரியின் உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பிறகுதான் அவர் கொலை செய்தது தெரிய வந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+