காஞ்சியில் கொதித்த நிர்மலா சீதாராமன்.. பந்தலை பிரித்ததுமே.. "வயித்திலே அடிப்பது": திமுக மீது சீற்றம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், பொதுமக்களுடன் அமர்ந்து, ராமர் விழா நிகழ்வை காண பொருத்தப்பட்ட எல்இடி திரை அகற்றப்பட்டுள்ளதற்கும், பந்தல்களை பிரித்ததற்கும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரத்தில் நேரடியாக ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டதையடுத்து, இதற்காக அமைக்கப்பட்ட பந்தல்கள் அதிரடியாக அகற்றப்பட்டன.

அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை நேரடி ஒளிபரப்பு செய்ய காஞ்சிபுரத்தில் கலெக்டர் அலுவலகம் அருகே பாஜவினர் திட்டமிட்டு இருந்தனர்.
பந்தல்கள்: இதற்காக ஒரு வார காலமாக தனியாருக்கு சொந்தமான இடத்தில் பெரிய அளவில் பந்தல்கள் அமைத்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் உட்கார்ந்து ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவைக் காண பிரம்மாண்ட எல்இடி திரை அமைக்கும் பணியும் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் காவல் துறை, பொது பணித்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் இதற்கு அனுமதி வழங்க மறுத்ததால் பந்தல்கள், மற்றும் விளக்குகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுமக்களுடன் அமர்ந்து காணும் வகையில் பொருத்ப்பட்ட எல்இடி திரையும் அகற்றப்பட்டுள்ளது. இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
கும்பாபிஷேகம்: காஞ்சியில் மட்டும் 466 இடங்களில் அயோத்தி கும்பாபிஷேகத்தை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்க காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனால் எல்.இ.டி. சப்ளையர்ஸ் அச்சத்தில் உள்ளனர்.. இந்து விரோத திமுக சிறு வணிகர்களை தாக்குகிறது. தமிழில் இதை "வயித்திலே அடிப்பது" என்பார்கள் என்று கூறியுள்ளார்.
நேற்றைய தினமும், தமிழக அரசுக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்திருந்தார். "தமிழகத்தின் பல பகுதிகளில் ராமர் கோயில் நிகழ்ச்சிகளை ஒட்டி பஜனைகளுக்கு ஏற்பாடு செய்தல், ஏழை எளியோருக்கு உணவு வழங்குதல், இனிப்புகள் வழங்கி கொண்டாடவும், அயோத்தியில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளை காண விரும்பும் மக்களும் அச்சுறுத்தப்படுகிறார்கள் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
பரபரப்பு: இந்நிகழ்ச்சிகளின் நேரடி ஒளிபரப்பின்போது மின்தடை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக, கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கூறியுள்ளனர். இவை அனைத்தும் இண்டியா கூட்டணிக் கட்சியான திமுகவின் இந்து விரோத முயற்சி" என்று அவர் பதிவிட்டிருந்த நிலையில், இப்போது மீண்டும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications