ஓபிஎஸ்ஸுக்கு எதிரியாக வந்த வருண பகவான்.. தொடர் மழையால் காஞ்சிபுரம் பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு!
காஞ்சிபுரம்: ஓ.பன்னீர்செல்வத்தின் புரட்சி பயண தொடக்க விழா பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் பொதுக்கூட்டம் இன்று மாலை தொடங்கிய நிலையில், தொடர்ந்து மழை பெய்ததால் பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்தார்.
அதிமுகவில் தலைமை பதவி யாருக்கு என்கிற போட்டியில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து தனி அணியாகச் செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றங்களில் சட்டப் போராட்டம் நடத்தி வந்தார். அதோடு, திருச்சியில் மாநாட்டையும் நடத்தினார். அடுத்தகட்டமாக ஓபிஎஸ் என்ன செய்யப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது புரட்சிப் பயணத்தை காஞ்சிபுரத்தில் இன்று மாலை தொடங்குவார் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக காஞ்சிபுரம் களியனூர் அருகே பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. 10 ஆயிரம் பேருக்கும் மேல் அமரும் வகையில் பொதுக்கூட்ட மேடை முன்பு இருக்கைகள் போடப்பட்டிருந்தன.
களியனூர் கிராமத்தில் இன்று மாலை இந்தப் பொதுக்கூட்டம் தொடங்கியது முதலே மழை பெய்யத் தொடங்கியது. அங்கு மழை கொட்டித் தீர்த்து வருவதால், பொதுக் கூட்டத்திற்கு வந்திருந்த தொண்டர்கள் பலரும் சிதறி ஓடினர். ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த டென்ட் பகுதிகளிலும் மேடைகளிலும் பலரும் தஞ்சமடைந்தனர். இதனால் பொதுக்கூட்டம் நடைபெறுமா என்ற சந்தேகம் நிலவியது.

எனினும், புரட்சி பயண தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுவதற்காக ஓ.பன்னீர்செல்வம் மழையையும் பொருட்படுத்தாது மேடைக்கு வந்து சேர்ந்தார். மழையில் அவர் நனையாமல் இருக்க நிர்வாகிகள் சிலர், அவருக்குக் குடை பிடித்து அழைத்துச் சென்றனர். மேடையை நோக்கிச் சென்ற அவர் தொண்டர்களுக்கு வணக்கம் செலுத்தினார்.
மேடையில் போய் அமர்ந்த ஓபிஎஸ்ஸுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நிர்வாகிகள் பலரும் அவரை வரவேற்றுப் பேசினர். எனினும், தொடர்ந்து கனமழை பெய்தபடியே இருந்ததால், ஓ.பன்னீர்செல்வம் தொடங்கவிருந்த புரட்சிப் பயண பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்தார்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் கூட்டம் தடைபட்டதாகவும், விரைவில் இக்கூட்டம் காஞ்சிபுரத்தில் மீண்டும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் இருந்து இருந்து புரட்சிப் பயணம் தொடங்கிய நிலையில், ஆரம்பமே மழையால் சொதப்பியுள்ளது அவரது அணியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications